Tuesday, August 21, 2012

Maranathin Vasal...

உலகின் தீர்க்கப்படாத மர்மம்: ‘பர்மியூடா முக்கோண’ மாய மறைவுகள்!

இது ஒரு முக்கோண கடல் பகுதி. இங்கு வந்த பல கப்பல்கள் மாயமாக மறைந்து போகின்றன. இந்த கடலுக்கு மேலே பறந்த பல விமானங்களும் மிஸ்ஸிங். என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை.
காற்றில் கரைகின்றனவா? வேறொரு கிரகத்துக்கு இழுக்கப்படுகின்றனவா? அல்லது கடலின் அடிப்பகுதியை நோக்கி உறுஞ்சப்படுகின்றனவா?
இந்த கடல் பகுதியில் எத்தனையோ விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், விபத்துக்குள்ளான கப்பல்களிலோ விமானங்களிலோ இருந்த ஒருவரது உடல்கூட ஏன் இதுவரை கிடைக்கவில்லை?
உடல்களை விடுங்கள் – அவை சிறியவை. விபத்துக்குள்ளாகிய கப்பல்கள் அல்லது விமானங்களின் பாகங்கள் கூடக் கிடைக்காமல் மாயமாக மறைகின்றனவே. அது எப்படி?

இதுதான் பர்மியூடா முக்கோணம்
பல வருடங்களாக நடைபெற்றுள்ள ‘காரணம் கூறப்படாத விபத்துக்கள்’ எல்லாவற்றிலும், இப்படியான மாய மறைவுகள்தான் ஒரேயொரு ஒற்றுமை என்பது ஆச்சரியமாக இல்லையா?
இந்த இடத்தில் பொதிந்திருக்கும் மர்மம், எப்போது அவிழும்?
மேலே கூறப்பட்ட கேள்விகள் அனைத்தும் குறிக்கும் இடம் – பர்மியூடா முக்கோணம் (The Bermuda Triangle) எனப்படும் இடம். இந்த இடத்துக்கு மற்றொரு பெயர், பிசாசு முக்கோணம் (Devil’s Triangle)
அட்லான்டிக் சமுத்திரத்திலுள்ள ஒரு சிறிய பகுதி இது. எல்லைகள் எவை? முக்கோணத்தின் ஒரு பக்கம், அமெரிக்கா, புளோரிடாவின் சில பகுதிகள், மற்றொரு பக்கம், பஹாமாஸ், மூன்றாவது பக்கம், அட்லான்டிக் சமுத்திரம். இந்த ஏரியாவுக்குள், மயாமி, சான்-வான் (San Juan-க்கு சரியான உச்சரிப்பு) போட்டோ ரிக்கோ, மற்றும் மிட்-அட்லான்டிக் தீவான பர்மியூடா.
இந்த பிசாசு முக்கோணத்தில் நடைபெற்ற சில மர்மச் சம்பவங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாமா?
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள ஃபோட் லாரடேல் விமான தரைக் கட்டுப்பாட்டு மையத்துக்கு ரேடியோ செய்தி ஒன்று வருகின்றது.
“ஆபத்து! அபாய அறிவிப்பு!! எங்களுக்குக் கீழே திடீரென தரை தெரியவில்லை. நாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதும் தெரியவில்லை”
இந்த அபாய அறிவிப்பு தரைக் கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்தது, மேலே பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் இருந்து. அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான விமானம் அது. பிளைட் இலக்கம் 19.
விமானத்தில் இருந்து ரேடியோ மூலம் தரையை தொடர்பு கொண்ட விமானி யின் பெயர், லெப்டினென்ட் சார்ள்ஸ் டெய்லர். அன்று மதியம் 2 மணிக்கு பிளைட் இலக்கம் 19 விமானத்த்தில் புறப்பட்டு சென்றிருந்தார் – வழமையான ரோந்து நடவடிக்கைக்காக.

1945-ல் வெளியான பத்திரிகை தலைப்புச் செய்தி!
சம்பவம் நடைபெற்ற தினம் டிசம்பர் 5-ம் தேதி, 1945-ம் ஆண்டு.
மாலை 3.45-க்கு விமானம் திரும்பி விமானப் படை முகாமுக்கு வந்திருக்க வேண்டும். வரவில்லை. ரேடியோ மூலம் அபாய அறிவிப்புத்தான் வந்து சேர்ந்தது. விமானிக்கு, தாம் எங்கே பறக்கிறோம் என்பதே தெரியாத விசித்திர செய்தியுடன்!
“நீங்கள் இப்போது பறந்து கொண்டிருக்கும் பொசிஷன் என்ன?” தரைத் தொடர்பு அதிகாரி ரேடியோவில் கேட்டார்.
“மீண்டும் சொல்கிறோம். நாங்கள் இருக்கும் பொசிஷன் எது என்றே தெரியவில்லை. சற்று நேரத்துக்கு முன்புவரை கீழே தரை தெரிந்து கொண்டிருந்தது. திடீரென தரை தெரியாமல் மறைந்து விட்டது” விமானத்திலிருந்து பதில் வந்தது.
லெப்டினென்ட் சார்ள்ஸ் டெய்லர் அமெரிக்க விமானப் படையின் திறமைசாலியான விமானிகளில் ஒருவர். பல வருட ஃபிளையிங் அனுபவம் உடையவர். அவரே தாம் பறந்து கொண்டிருக்கும் பொசிஷன் தெரியாது என்று கூறியது, தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தவர்களுக்கு மகா ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
விமானம் எங்கே போயிருக்க முடியும்? தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த ஃபிளைட் பிளானை பார்த்தார்கள். பிளைட் இலக்கம் 19-க்கு கொடுக்கப்பட்டிருந்த பறக்கும் பாதை, புளோரிடாவின் கரையோரமாக கிழக்கு நோக்கி பகாமாஸ் தீவுகள் வரை செல்வது. அது கிட்டத்தட்ட 160 மைல்கள் பறக்கும் தொலைவு.
அந்த இடத்தில் சென்றடைந்த பின், அங்கிருந்து வடக்கே 40 மைல்கள் பறந்து, மீண்டும் தென்மேற்குத் திசையில் திருப்பி புளோரிடாவிலுள்ள விமானப் படை முகாமுக்கு திரும்பி வரவேண்டும் என்பதே, விமானிக்கு கொடுக்கப்பட்ட பிளைட் பிளான்.
அன்றைய தினத்தில் ரோந்து நடவடிக்கைகளுக்காக பிளைட் இலக்கம் 19 தனியே செல்லவில்லை. அந்த விமானத்துடன், வேறு 4 விமானங்களும் புறப்பட்டுச் சென்றிருந்தன. அந்த விமானங்களும் வந்து சேரவில்லை. அவர்களிடம் இருந்து தகவலும் ஏதுமில்லை.
அந்த நாட்களில் அமெரிக்க விமானப்படையின் ரோந்து விமானங்கள் ஒவ்வொன்றிலும் மொத்தம் 3 பேர் இருப்பார்கள். ஒரு விமானி, ஒரு துப்பாக்கி இயக்குபவர், ஒரு ரேடியோ ஆபரேட்டர்.
1945, டிசம்பர் 5-ம் தேதி புறப்பட்டுச் சென்ற விமானங்களில் செல்ல வேண்டியவர்களில் ஒருவர் மாத்திரம் முன்கூட்டியே லீவுக்கு விண்ணப்பித்திருந்தார். அவர் ஒரு ரேடியோ ஆபரேட்டர். கடற்படை முகாமின் தலைமை அதிகாரி அவருக்கு லீவு கொடுத்திருந்தார். ஆனால் அவரது இடத்தை நிரப்புவதற்கு வேறு ஒரு ரேடியோ ஆபரேட்டரை நியமிக்கவில்லை.
விமானங்கள் புறப்பட வேண்டிய நேரத்துக்கு சில நிமிடங்கள் முன்புதான் இது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் ரோந்து விமானங்களை செலுத்த வந்த விமானிகள் யாரும் அதை பெரிது படுத்தவில்லை. அநேகமாக எல்லா விமானிகளும் ரேடியோ இயக்குவதில் பயிற்சி பெற்றவர்கள் என்பதால், ரேடியோ ஆபரேட்டர் இல்லாவிட்டால் பரவாயில்லை என்று விட்டுவிட்டார்கள்.
அது, அப்போது பெரிய பிரச்னையாக இருக்கவில்லை. இப்போது, விமானங்களுக்கு சிக்கல் வந்தபோது, அந்த விஷயமும் அலசப்பட்டது. புறப்பட்டுச் சென்ற விமானங்கள் திரும்பவில்லை. விமானத்திலிருந்து அபாய அறிவிப்பு வருகின்றது. மொத்தம் 5 விமானங்கள். அதில் 14 ஆட்கள்!
தரைக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து ரேடியோ உரையாடல்கள் தொடர்ந்தன.
“உங்களுக்கு தரப்பட்ட பிளைட் பிளானின் படி, நீங்கள் முதலாவது கட்ட பறத்தலை (first leg of the flight plan) முடித்து விட்டீர்களா?”
“முடித்து விட்டோம்” சார்ள்ஸ் டெயிலரிடம் இருந்து பதில் வந்தது.
“அப்படியானால் புளோரிடாவில் இருந்து 160 மைல்கள் கிழக்கே சென்றுவிட்டீர்கள்”
“ஆம்”
“இரண்டாவது கட்டப் பறத்தலை ஆரம்பித்து விட்டீர்களா?”
“இன்னும் இல்லை”
“நல்லது. இரண்டாவது கட்டத்தில் நீங்கள் வடக்கு நோக்கி 40 மைல்கள் பறப்பதாக பிளைட் பிளான் இருக்கிறது. அதைச் செய்ய வேண்டாம். விமானத்தை மேற்கு நோக்கித் திருப்பி தொடர்ந்து பறவுங்கள். கடலுக்குள் செல்லாமல், புளோரிடா கரையை நோக்கி வரத் துவங்குவீர்கள்” என்று தரையில் இருந்து ஐடியா கொடுக்கப்பட்டது.
இதற்கு, விமானத்தில் இருந்து வந்த பதில், தரைக்கட்டுப்பாட்டு அதிகாரியை தூக்கிவாரிப் போட்டது.
“மேற்கு எந்தத் திசையில் இருக்கிறது என்பதே தெரியவில்லை. எல்லாமே குழப்பமாக இருக்கின்றது. இப்போது கீழே கடல் தெரிகிறது. ஆனால் அது கூட வழமையாகத் தெரியும் கடல் போல இல்லை. எல்லாமே வித்தியாசம். நாங்கள் வேறு கண்டத்திலோ, கிரகத்திலோ இருக்கிறோமா?”
“மேற்கு எந்தத் திசையில் இருக்கிறது என்பதே தெரியவில்லை. எல்லாமே குழப்பமாக இருக்கின்றது. இப்போது கீழே கடல் தெரிகிறது. ஆனால் அது கூட வழமையாகத் தெரியும் கடல் போல இல்லை. எல்லாமே வித்தியாசம். நாங்கள் வேறு கண்டத்திலோ, கிரகத்திலோ இருக்கிறோமா?” என்று விமானத்தில் இருந்து வந்த ரேடியோ மெசேஜ்,  தரையில் இருந்தவர்களை குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது.
திசைகூடத் தெரியவில்லையா?
விமானங்கள் காலையில் தரையில் இருந்து புறப்பட்டுச் சென்றபோது, அவற்றில் கோளாறுகள் எதுவுமில்லாமல் இருந்தன என்று மெக்கானிக்குகள் பரிசோதித்து கிளியரன்ஸ் கொடுத்திருந்தார்கள். அன்றைய தினத்தில் வானம்கூட முகில்கள் அற்று கிளியராக இருந்தது. மோசமான காலநிலை இல்லை. இரவு நேரம் அல்ல.
அப்படியான சூழ்நிலையில் விமானிக்கு மேற்கு எந்த பக்கத்தில் இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை என்றால், அவர்களால் சூரியனைப் பார்க்க முடியவில்லை என்றும் அர்த்தமாகின்றது.
வானம் தெளிவாக இருக்கும்போது, இது எப்படிச் சாத்தியமாகும்?
விமானங்கள் புறப்பட்டுச் சென்ற நேரம், வேகம், ஆரம்ப திசை ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது, இந்த விமானங்கள் கிட்டத்தட்ட எந்த வான் பகுதியில் பறந்து கொண்டிருக்கலாம் என்பதை தரையிலிருப்பவர்களால் ஊகிக்கக் கூடியதாக இருந்தது.
அந்த வான்பரப்பு -
பர்மியூடா முக்கோணத்தின் மேலுள்ள வான் பகுதி!
எங்கேயிருக்கின்றது இந்த அபாய முக்கோணம்?
உலக வரைபடத்தில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து பர்மியூடா தீவுக்கு ஒரு கோடு கீறுங்கள். பர்மியூடா தீவில் இருந்து போட்டோ ரிக்கோ தீவுக்கு மற்றுமோர் கோட்டைக் கீறுங்கள். இறுதியாக போட்டோ-ரிக்கோ தீவிலிருந்து மற்றுமோர் கோடு கீறவேண்டும்.
இந்த மூன்றாவது கோடு போட்டோ ரிக்கோவிலிருந்து பகாமாஸ் தீவின் ஊடாக மறுபடியும் புளோரிடாவை தொடவேண்டும்.
கீறப்பட்ட மூன்று கோடுகளும் ஒரு முக்கோணத்தை உருவாக்குகின்றன அல்லவா. அதுதான். பர்மியூடா முக்கோணம் என்று அழைக்கப்படும் மர்மப் பிரதேசம். இந்தச் சிறிய கடற்பகுதியில்தான் கடலிலும் வானிலும் திடீர் மறைவுகள் பல ஏற்படுகின்றன.
அபாய முக்கோணத்துக்கு மேலே பறந்து கொண்டிருந்த 5 விமானங்களும் இப்போது மற்றுமோர் சிக்கலைச் சந்திக்கத் தொடங்கின. தரையுடன் அவர்கள் வைத்திருந்த ரேடியோ தொடர்புகள், சத்தம் குறைவாகவும், தெளிவில்லாமலும் போகத் தொடங்கின.
ரேடியோ தொடர்பில் வேறு சில ஒலிகளும் இடையூறு செய்ய தொடங்கின.
ஆனால் தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இந்தப் பிரச்சனை இருக்கவில்லை.
வானில் இருந்த விமானி தரைக்கு கூறும் ரேடியோச் செய்திகளும் தெளிவாகக் கேட்டன. அதுமாத்திரமல்ல, வானில் இருந்த ஐந்து விமானங்களிலிருந்து ஐந்து விமானிகளும் தங்களுக்கிடையே பேசிக்கொண்டே உரையாடல்கள்கூட தரையில் இருந்தவர்களுக்குத் துல்லியமாகக் கேட்டது.
விமானிகளின் உரையாடல்களின்படி அவர்களது விமானங்கள் எல்லாவற்றிலும் இருந்த கன்ட்ரோல் உபகரணங்கள் சரியாக இயங்கவில்ல. ஏறுமாறான தரவுகளைக் காட்டின. அத்துடன் திசைகாட்டும் கம்பாஸ் கருவி முழுமையாகவே இயங்காது போய்விட்டிருந்தது.
விமானிகளின் குரல்களில் ஆரம்பத்தில் குழப்பம் தெரிந்தது. சிறிது சிறிதாக அந்தக குழப்பம் பயமாக மாறத் தொடங்குவது தெரிந்தது.
இதற்கிடையே விஷயம் தரையிலுள்ள மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. உயரதிகாரிகள் பலர் தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்து விட்டார்கள்.
அத்துடன் விமானிகளுக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளர்களும் தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு அழைக்கப்பட்டார்கள். காரணம், தரையில் இருந்தபடியே ரேடியோ மூலமாக பயிற்சியாளர்களால், விமானம் இயக்குவது பற்றிய அறிவுறுத்தல்களை விமானிகளுக்கு தெரிவிக்கமுடியும்.
வந்திருந்த பயிற்சியாளர்கள் பல வருடங்களாக விமானிகளுக்கு பயிற்சி கொடுத்தவர்கள். புதிய விமானிகள் பயிற்சிக்காகப் பறக்கும்போது அவர்களுடன் பலதடவைகள் கூடவே பறந்தவர்கள். அத்துடன் அவர்களே எத்தனையோ தடவைகள் பர்மியூடா முக்கோணப் பகுதிக்கு மேலாக பறந்திருந்தவர்கள். அந்த வான் பகுதியை நன்றாக அறிந்திருந்தவர்கள்.
5 விமானிகளும் தமக்கிடையே பதட்டமாக பேசிக் கொண்டதை, கீழேயிருந்த பயிற்சியார்கள் கூர்ந்து கவனித்து கொண்டிருந்தார்கள். அவர்களது பேச்சுக்களில் இருந்து ஏதாவது க்ளூ கிடைக்கிறதா என்று தெரிந்து கொள்ள முயன்றார்கள்.
“உங்களது திசைகாட்டும் கருவியின் வாசிப்பு எப்படி இருக்கிறது? திசை தெரிகிறா?” ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் கேட்கிறார்.
“கருவி இயங்கவில்லை. தென்கிழக்குத் திசையில் அசையாமல் நிற்கிறது.”
“கடைசியாக திசைகாட்டும் கருவி எப்போது இயங்கியது என்பது ஞாபகம் இருக்கிறதா?”
“ஆம். கடைசியாக பகாமாஸ் தீவின் மேல் சிக்கன் ஷோவால்ஸ் பகுதி வான்பரப்பில் வைத்து விமானத்தை வடக்கு நோக்கித் திருப்பினேன். அப்போது திசைகாட்டும் கருவி சரியாக இயங்கியது.”
“அதன் பின்னர் இயங்கவில்லையா?”
“இல்லை” »
“எனது விமானமும் அப்படித்தான்” என்றார் மூன்றாவது விமானி ஒருவர்.
“அப்படியானால் அந்தக் கடைசி திருப்பலில்தான் எங்கோ தவறு இருக்கிறது.”
இதைத் தரையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த பயிற்சியாளர் ஒருவர், தனது அனுபவத்தை வைத்து ஒரு விஷத்தை ரேடியோ மூலம் விமானிகளுக்கு தெரிவித்தார்.
“பகாமாஸ் தீவிலிருந்து நீங்கள் வடக்கே 90 டிகிரி திருப்பியிருப்பீர்கள். காற்றின் வேகமோ அல்லது வேறு ஏதாவதோ உங்களது விமானங்களை சில டிகிரிகள் இடதுபுறமோ வலதுபுறமோ திருப்பி விட்டிருக்கலாம்.”
“சொல்லுங்கள். கேட்டுக்கொண்டிருக்கிறோம். சற்று உரத்த குரலில் கூறுங்கள். ரேடியோ தெளிவில்லை.”
“இப்போது உங்களது விமானங்கள் பகாமாஸ் தீவில் இருந்து வட-மேற்குத் திசையிலே அல்லது வட-கிழக்குத் திசையிலோ சென்று கொண்டிருக்கலாம்.”
“சாத்தியம்தான்”
“அப்படியானால் உங்கள் விமானம், அமெரிக்கக் கரையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறது. விமானங்களை 180 டிகிரி திருப்ப முடியுமா என்று பாருங்கள். அப்படி திருப்பினால், நீங்கள் புளோரிடாவின் தென் முனையிலுள்ள சிறிய தீவுகளை நோக்கி வர தொடங்குவீர்கள்.”
விமானங்கள் திருப்பப்பட்டன. சிறிது தூரம் பறந்தன.
இப்போது ரேடியோவில் மீண்டும் சார்ள்ஸ் டெயிலரின் குரல் கேட்டது.
“எங்களுக்கு கீழே ஒரேயொரு ஒற்றைத்தீவு தெரிகிறது. இப்போது அதையும் கடந்து செல்கிறோம். அதைத்தவிர வேறு எந்த நிலப்பகுதியும் கீழே தெரியவில்லை.”
டெயிலரின் இந்தக் கூற்றிலிருந்து ஒரு விஷயத்தை தரையில் இருந்தவர்கள் புரிந்து கொண்டார்கள்.
அந்த விஷயம்–
விமானங்கள் அமெரிக்கக் கரையை நோக்கி வரவில்லை.
காரணம், அமெரிக்க கரையை நோக்கி வந்தால், புளோரிடாவுக்கு அருகில் பல சிறு சிறு தீவுகள் இருக்கின்றன. அவை கண்களில் தட்டுப்பட்டிருக்கும். கீழே தெரிந்தது ஒரேயொரு ஒற்றைத் தீவு என்றால், விமானங்கள் வேறு ஏதோ திசையில் செல்கின்றன.
ஆனால அது எந்த திசை?
சரியாக மாலை 4 மணிக்கு விமானிகளிடையே நடைபெற்ற ஒரு உரையாடல், கீழேயிருந்தவர்கள் அதிர்ச்சியடைய வைத்தது.
அதுவரை அந்த ஐந்து விமானங்களுக்கும தலைமை கமாண்ட் விமானியாக இருந்த லெப்டினென்ட் சார்ள்ஸ் டெயிலர், அந்தப் பொறுப்பை மற்றொரு விமானியிடம் ஒப்படைத்துவிட்டார்.
இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது?
விமானிகளிடையே மிக மிக அவமானத்துக்குரிய ஒரு விஷயமாகக் கருதப்படுவது இந்தச் செய்கை. விமானிகள் கொண்ட குழுவொன்றுக்கு தலைமை கமாண்ட் அதிகாரியாக நியமிக்கப்படுவது என்பது, பதவிக்கும் அனுபவத்துக்கும் கொடுக்கப்படும் கௌரவம்.
அப்படிக் கொடுக்கப்பட்ட பொறுப்பை ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் ஒப்படைக்கிறார் என்றால், ஒன்று அவர் மிக மோசமாக காயமடைந்து செயலிழந்திருக்க வேண்டும். அல்லது, தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை, தன்னால் சரியாக நிறைவேற்ற முடியாது என்று புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
சார்ள்ஸ் டெயிலர் மனத்தளவில் பெரிதும் சோர்வடைந்து விட்டார் என்று தரையில் இருந்தவர்கள் புரிந்து கொண்டார்கள். விமானம் எங்கே இருக்கிறது, எந்தத் திசையில் செல்கிறது என்று எதுவுமே தெரியாத நிலையில், விமானிகளுக்கு ஏற்படக்கூடிய சோர்வு இது.
இதனால் அவரால் மற்றயவர்களுக்கு கமாண்ட் கொடுக்க முடியாது. வேண்டுமானால் மற்றயவர்களது அறிவுறுத்தல்களை செயல்படுத்த முயற்சிக்கலாம்.
டெயிலரால் பொறுப்பு கொடுக்கப்பட்ட விமானியின் பெயர், கேப்டன் ஸ்டீவர்.
சில நிமிடங்களில கேப்டன் ஸ்டீவரின் குரல், தரைக்கட்டுப்பாட்டு மைய ரேடியோவில் ஒலித்தது.
“எங்களது விமானங்கள் எந்த பொஸிஷனில் பறக்கின்றன என்பதை புரிந்து கொண்டு விட்டேன் என்று நினைக்கிறேன்” என்றார் அவர்.
விமானம் பறந்து கொண்டிருந்த இடத்தை நிஜமாகவே அவர் புரிந்து கொண்டாரா?
கேப்டன் ஸ்டீவரின் குரல், தரை கட்டுப்பாட்டு மைய ரேடியோவில், “எங்களது விமானங்கள் எந்த பொஸிஷனில் பறக்கின்றன என்பதை புரிந்து கொண்டு விட்டேன் என்று நினைக்கிறேன்” என்று கேட்டபோது, கீழே இருந்தவர்களுக்கு ஓரளவுக்கு நிம்மதி ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் ஸ்டீவரின் குரல் மீண்டும் ரேடியோவில் ஒலித்தது. “இப்போது எல்லாமே எனக்கு புரிந்து விட்டது. நாங்கள் சரியான திசையில்தான் பயணத்திருக்கிறோம். ஆனால் அதீத உயரத்தில் பறந்துவிட்டோம். இதனால் புளோரிடாவைத் தாண்டி மெக்ஸிகோ வளைகுடாவுக்கு மேலே பறக்கிறோம். உயரம் அதிகமாக இருப்பதால் தரை தெரியவில்லை. அவ்வளவுதான்”
இந்தச் செய்தி கிடைத்ததும் தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தவர்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
கீழேயிருந்து அறிவுறுத்தல் அனுப்பப்பட்டது.
“உங்களது விமானங்கள் மெக்ஸிகோவை நோக்கிப் போகின்றன என்றால், விமானங்களின் உயரத்தைக் குறைத்து, கிழக்கு நோக்கித் திருப்புங்கள்.”
“சரி. அப்படியே செய்கின்றோம்.”
ஐந்து விமானங்களும் கிழக்கு நோக்கித் திருப்பப்பட்டன.
“உயரத்தை குறைந்து விட்டீர்களா?”
“இன்னமும் இல்லை. எல்லா விமானங்களிலும் உயரத்தைக் காட்டும் கருவிகள் செயலிழந்துள்ளன.”
“கீழே தரையோ கடலோ தெரிகின்றனவா?”
“இல்லை”
‘அப்படியானால் தைரியமாக உயரத்தைக் குறையுங்கள். மீட்டர்கள் இயங்கா விட்டாலும் பரவாயில்லை.”
“சரி. 10,000 அடிவரை குறைக்கலாமா?”
“செய்யுங்கள்.”
இப்படிச் சொன்னாலும், தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தவர்களுக்கு ஒரு விஷயம் புரிந்திருந்தது. என்னதான் விமானிகள் 10,000 அடிவரை உயரத்தைக் குறைக்க போவதாகக் கூறினாலும், உயரத்தைக் காட்டும் கருவிகள் இயங்காத போது, அவர்களால் தங்களது விமானங்களின் உயரத்தை சரியாக 10,000 அடி குறைக்க முடியாது.
வேண்டுமானால் சுமாராக குறைக்கலாம். அவ்வளவுதான். அதுவும் ஆபத்துத்தான். ஆனால் வேறுவழியில்லை.
மேலும் 20 நிமிடங்கள் சென்றன.
இவர்களது விமானங்கள் ஸ்டீவர் கூறியதுபோல மெக்ஸிகோ வளைகுடா பக்கமாக சென்றிருந்தால், அவை கிழக்குத் திசையில் திருப்ப பட்டிருந்தால், இப்போது புளோரிடாவின் ஓரமாகவுள்ள சிறிய தீவுகள் கண்ணில் பட வேண்டும்.
ஆனால் தெரியவில்லை. கீழே கடலும் தெரியவில்லை.
“இதில் ஏதோ தவறு இருக்கிறது. நாங்கள் உயரத்தைக் கணிசமாக குறைந்து விட்டோம். விமானங்களை கிழக்குத் திசையில் திருப்பி பறக்கிறோம். அப்படியிருந்தும் எதுவும் தெரியவில்லை” விமானியின் குரல் லோசாக நடுங்குவதை, கீழேயிருந்தவர்கள் கவனித்தார்கள்.
“உயரத்தை இன்னமும் குறையுங்கள்”
“குறைக்கிறோம்.”
“நீங்கள் பறந்து கொண்டிருக்கும் இடத்தில் வெளியே பார்க்க முடியாதபடி, மேகங்களோ, பனி மூட்டமோ இருக்கிறதா?”
“இல்லை. வானம் தெளிவாக இருக்கிறது.”
இப்போது தரையில் இருந்தவர்களுக்கு ஒரு பயம் ஏற்பட்டிருந்தது. மேலேயிருந்து கூறியவர்கள் தாங்கள் புளோரிடாவைக் கடந்து மெக்ஸிகோ வளைகுடாவின் மேலே பறந்து கொண்டிருப்பதாகக் கூறியதால்தான், அவர்களை கிழக்கு பக்கமாகத் திரும்பும்படி தரையில் இருந்து கூறியிருந்தார்கள்.
ஒருவேளை, அவர்கள் மெக்ஸிகோ வளைகுடாவின் மேல் பறக்காமல், புளோரிடாவின் மறுபக்கத்தில் (அட்லான்டிக் சமுத்திரப் பக்கத்தில்) நின்றிருந்தால்?
கிழக்குப் பக்கம் திருப்பப்பட்ட விமானங்கள் புளோரிடா கரையை நோக்கி வராமல், நடுக்கடலை நோக்கச் சென்று கொண்டிருக்கும்.
அடுத்து ஐந்து நிமிடங்களுக்கு ரேடியோ நிசப்தமாக இருந்தது. விமானிகள் தங்களுக்குள் பேசிக் கொள்வதுகூடக் கேட்கவில்லை. கீழேயிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்குக்கூட மேலேயிருந்து பதில் வரவில்லை.
ஐந்து நிமிடங்களின் பின்னர், ரேடியோவில் கரகரவென்று விசித்திரமான இரைச்சல் ஒலியொன்று சில விநாடிகள் கேட்டது. இரைச்சலின் முடிவில், ஐந்து விமானிகளில் ஒருவரின் குரல் ரேடியோவில் கேட்டது.
அவர் குழப்பமான நடுங்கும் குரலில், ஒரு வாக்கியம் சொன்னார்.
அந்த வாக்கியம்தான், ஐந்து விமானங்களில் இருந்தும் கடைசியாகப் பேசப்பட்ட வாக்கியம். அதன் பிறகு ஐந்து விமானங்களில் இருந்தவர்களும் தரையைத் தொடர்பு கொள்ளவே இல்லை.
கடைசியாகக் கூறப்பட்ட வாக்கியம் -
“எமது விமானங்கள் இப்போது வெள்ளை நிற திரவத்துக்குள் நுழைகின்றன”
ஐந்து விமானங்களும் அதிலிருந்த 14 பேரும் மாயமாக மறைந்து போனது அமெரிக்க விமானப்படையில் பெரிய குழப்பத்தை உருவாக்கியது. மாயமாக மறைவதற்கு முன் ஒரு விமானி, “எமது விமானங்கள் இப்போது வெள்ளை நிற திரவத்துக்குள் நுழைகின்றன” என்று கூறியதன் அர்த்தம் யாருக்கும் புரியவில்லை.
மாயமாக மறைந்த விமானங்களை தேடிச் செல்லவும், மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கும், அவசர அவசரமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இப்போதுள்ள முக்கிய கேள்வியே, எங்கே போய் தேடுவது? விமானத்தை செலுத்திய விமானிகளுக்கே, தாம் எங்கே பறந்து கொண்டிருந்தோம் என்பது தெரியவில்லை.
மாயமாக மறைந்து போன விமானங்கள் தொடர்ந்தும் பறந்து கொண்டிருக்க முடியாது. ஏதோ ஒரு கட்டத்தில் எரிபொருள் தீர்ந்துபோகும். அப்போது கீழே விழத்தான் வேண்டும்.
கீழே விழும் இடம், அனேகமாக அட்லான்டிக் சமுத்திரமாகத்தான் இருக்கும் என்று ஒரு தியரி வைத்துக் கொண்டார்கள்.
தேடுதல் வானில் மட்டுமின்றி, கடலிலும் நடைபெறவேண்டும் என்பதால், மீட்புப் பணிக்காக கடலில் இறங்கக்கூடிய விமானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
மார்டின் மரைனர் ரகத்திலான விமானம் அது. அந்த நாட்களில் இந்த ரக விமானங்களை பறக்கும் படகு (flying boat) என்பார்கள். அதில் மொத்தம் 13 பேர் மீட்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டனர்.
அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான விமானம் அது. 77 அடி நீளமானது. கடலில் விபத்துகள் ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக என்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட அதில், நவீன மீட்பு உபகரணங்கள் எல்லாம் இருந்தன.
புளொரிடாவில் இருந்து வடகிழக்குத் திசையில் தேடுதல் விமானம் கிளம்பிச் சென்றது.
விமானம் கிளம்பி சுமார் 10 நிமிடங்களின் பின்னர், மார்டின் மரைனர் விமானத்தின் விமானி ரேடியோ மூலம் தரையைத் தொடர்பு கொண்டார். தரையிலிருந்து 5000 அடி உயரத்துக்கு மேலே கடுமையான காற்று வீசுவதாகக் கூறினார்.
விமானம் புறப்பட்டு 20 நிமிடங்களின் பின்னர் தரையில் இருந்தவர்கள் விமானியை ரேடியோவில் அழைத்து, “விமானம் இப்போது எந்த இடத்தில் பறந்து கொண்டிருக்கிறது” என்று கேட்டார்கள்.
மறுமுனையில் பதில் இல்லை.
தொடர்ந்து மீண்டும், மீண்டும் ரேடியோவில் அழைத்துப் பார்த்தார்கள். பதில் இல்லை.
மாயமாக மறைந்துபோன 5 விமானங்களையும், 14 பேரையும் தேடுவதற்காக, 13 பேருடன் அனுப்பப்பட்ட விமானமும் மாயமாக மறைந்து விட்டிருந்தது.
சுமார் 5 மணி நேரம், மார்டின் மரைனர் விமானத்தில் இருந்து ஏதாவது தகவல் வரும் என்று காத்திருந்தார்கள். பலன் பூச்சியம்தான்.
மறுநாள் காலை மிகப் பெரிய அளவிலான மீட்பு நடவடிக்கை ஒன்றுக்கான ஆயத்தங்கள், இரவோடு இரவாகச் செய்யப்பட்டன. அதுவரையில் அமெரிக்காவில் செய்யப்பட்ட மிகப் பெரிய மீட்பு நடவடிக்கை அதுதான்.
கடற்படைக்கு சொந்தமான எல்லைப்புற ரோந்துக் கப்பல்கள் எட்டு, பல நீர்மூழ்கிக் கப்பல்கள், நூற்றுக்கணக்கான தனியார்…சிறு கப்பல்கள், யுத்தக் கப்பல்கள் (டிஸ்ட்ராயர்கள்) நான்கு, என்று நினைத்தே பார்க்க முடியாத அளவில் அளவிலான தேடுதல் கடலில் ஆரம்பமாகியது.
இவ்வளவும் போதாதென்று, அமெரிக்க கடற்படையின் பெரிய விமானம் தாங்கிக் கப்பலான சாலமன்ஸ், அட்லான்டிக் கடலில் தேடுதல் பகுதிக்கு நகர்த்தப்பட்டது. சாலமன்ஸ் கப்பலில் இருந்த விமானங்களின் எண்ணிக்கை அறுபது.
அதைவிட அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான விமானத் தளங்களில் இருந்து உதவிக்காகத் தருவிக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 240.
பிரிட்டனின் ராயல் விமானப் படைக்குச் சொந்தமான பல விமானங்கள், பிரிட்டிஷ் காலனி நாடாக இருந்த பகாமாஸ் தீவுகளிலும், மேற்கிந்திய தீவுகளிலும் இருந்தன. விஷயம் கேள்விப்பட்டு அவையும் உதவிக்கு வந்தன.
கடலிலும், வானிலும், தரையிலும் ஒவ்வொரு சதுர கிலோ மீட்டரும் தேடுதலுக்கு உள்ளாக்கப்பட்டது. விமானங்கள் சில கடல் மட்டத்திலிருந்து வெறும் 400 அடி உயரத்தில் பறந்து தேடின.
அமெரிக்க விமானப்படை விமானிகளுக்கு பயிற்சி கொடுக்கும்போது, விமானத்தை ஒரேயிடத்தில் நகராமல் நிறுத்தி வானில் மிதந்தபடி இருப்பதற்கான பயிற்சி ஒன்று கொடுக்கப்படும். இப்படி வானில் ஒரேயிடத்தில் நிறுத்தப்பட்டு மிதக்க விடப்பட கூடிய ஆகக்கூடிய நேரம் 90 விநாடிகள்.
கடல் மட்டத்தில் ஏதாவது தெரியும் இடங்களில், விமானங்கள் 90 விநாடி மிதப்புக்களைச் செய்து, கீழே தெரியும் பொருட்களை போட்டோ எடுத்தன.
மொத்தமாக 2 லட்சத்து 80ஆயிரம் சதுர மைல்கள் கடற்பரப்பளவு தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டது. கடலில் விழுந்த விமானங்கள் கடலுக்கு அடியே போயிருக்கலாமோ என்று நீர்மூழ்கிக் கப்பல்கள் தேடின.
பலன் பூச்சியம்!
முதலில் தொலைந்து போன 5 விமானங்களும், அதைத் தேடச் சென்ற மற்றுமோர் விமானமும், 6 விமானங்களிலும் இருந்த 27 பேரும் எந்தவொரு சுவடுமில்லாமல், மாயமாக மறைந்தே போயிருந்தார்கள்.
இந்த மர்மத்துக்கு எப்படி விடை கண்டுபிடிப்பது என்றே யாருக்கும் புரியவில்லை.
கடைசியாக விமானியிடமிருந்து வந்த தகவலான “எமது விமானங்கள் இப்போது வெள்ளை நிற திரவத்துக்குள் நுழைகின்றன” என்ற வாக்கியத்தில் தான் இந்த மர்மத்துக்கான விடை இருக்கிறது என்று பலர் ஆராய்சியில் இறங்கினார்கள்.
விமானம், கடலுக்கு மேல் இறுதியாக பறந்தது என்று எடுத்துக் கொள்ளலாம். தண்ணீருக்கோ நிறம் கிடையாது. விமானத்தில் இருந்து பார்க்கும்போது கடல் நீல நிறமாக தெரியலாம். அலை அடிப்பதை உயரத்திலிருந்து பார்க்கும்போது சில சமயங்களில் வெள்ளை நிறத்தில் தெரியலாம். ஆனால், தண்ணீருக்கு அருகே விமானம் வந்துவிட்டால், தண்ணீர் வெள்ளையாக தெரியாது.
இவர்களது விமானம் வெள்ளை நிறமான திரவம் ஒன்றுக்குள் பிரவேசித்திருக்கிறது!
வானத்தில் வெள்ளை நிறமான திரவம் எங்கேயிருக்கும்? யாராலும் விடை கண்டுபிடிக்க முடியவில்லை.
அமெரிக்க விமானப்படை விமானங்களின் மறைவுபற்றி ஆராய விசாரணைக்குழு  ஒன்றை அமைத்தது. அதில் விமானப்படை அதிகாரிகள், ஏவியேஷன் வல்லுனர்கள், விண்வெளி விஞ்ஞானிகள், ஆராய்சியாளர்கள் என்று பலர், இந்த விமானங்கள் மறைந்ததற்கு ஒவ்வொரு விதமான தியரிகளைச் சொன்னார்கள்.

முதலில் தொலைந்து போன 5 விமானங்களும், அதைத் தேடச் சென்ற மற்றுமோர் விமானமும், 6 விமானங்களிலும் இருந்த 27 பேரும் எந்தவொரு சுவடுமில்லாமல், மாயமாக மறைந்தே போயிருந்தார்கள்.
அமெரிக்க விமானப்படை விமானங்களின் மறைவுபற்றி ஆராய விசாரணைக்குழு  ஒன்றை அமைத்தது. அதில் விமானப்படை அதிகாரிகள், ஏவியேஷன் வல்லுனர்கள், விண்வெளி விஞ்ஞானிகள், ஆராய்சியாளர்கள் என்று பலர், இந்த விமானங்கள் மறைந்ததற்கு ஒவ்வொரு விதமான தியரிகளைச் சொன்னார்கள்.
விமானப்படை அதிகாரிகளால் கூறப்பட்டது, “முதலில் அனுப்பப்பட்ட 5 விமானங்களும் வானில் ஒன்றுடன் ஒன்று மோதி வீழ்ந்திருக்கலாம்” என்பதாக ஒரு சாத்தியம்.
அப்படி நடந்திருந்தால், மோதிக் கடலில் விழுந்த விமானத்தின் சிதைந்த பாகங்கள் எங்கே? இறந்தவர்களின் உடல்கள் எங்கே? தேட அனுப்பப்பட்ட விமானம் எங்கே? என்று விசாரணைக்குழு கேட்ட கேள்விகளுக்கு, விமானப்படை அதிகாரிகளிடம் பதில் இல்லை.
விசாரணையின்போது கூறப்பட்ட அடுத்த சாத்தியம், பர்மியூடா முக்கோணப் பகுதிக்கு மேலாக, வருடத்தில் குறிப்பிட்ட ஓரிரு தினங்களில் வரும் செவ்வாய் போன்ற கிரகம் ஒன்றுக்கு, விமானங்கள் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்பது.
புவியீர்ப்பு விசை வானில் ஒரு உயரம் வரையுள்ள பொருள்களை கீழ்நோக்கி இழுப்பதுபோல, குறிப்பிட்ட சில தினங்களில், குறிப்பிட்ட ஒரு கிரகத்திலிருந்து அதீத ஈர்ப்பு விசை ஏற்பட்டு விமானங்கள் மேல் நோக்கி இழுக்கப்பட்டிருக்கலாம்.
பூமியின் மேற்பரப்பில் தரையும், தண்ணீரும் இருப்பதுபோல, அந்தக் கிரகத்தின் மேற்பரப்பில் வெள்ளை நிறமான திரவம் இருக்கலாம்.
இந்தச் சாத்தியம் ஒரு ‘மே-பி’ ரகத்திலான சாத்தியமே தவிர, நிரூபிக்க முடியாத சாத்தியமாக விசாரணைக்குழுவால் பதிவு செய்யப்பட்டது.
மூன்றாவது சாத்தியம், அமெரிக்க வானியல் ஆய்வு விஞ்ஞானிகள் அடங்கிய முழு ஒன்றினால் கூறப்பட்டது.
அதன்படி, வெளிக் கிரகம் ஒன்றில் இருந்து வரும் ஆட்களின் விண்வெளிக் கலம் ஒன்று (பறக்கும் தட்டு போன்ற ஒரு சமாச்சாரம்) இந்தப் பகுதியில் உலாவலாம். பூமியில் வசிக்கும் மக்களை ஆராய்சி செய்வதற்காக அவர்கள், இவர்களை விமானங்களுடன் சேர்த்து தங்களது விண்கலங்களுக்குள் உறுஞ்சி எடுத்துச் சென்றிருக்கலாம்.
இந்தச் சாத்தியத்துக்கு ஆதாரமாக அந்த விஞ்ஞானிகள் குழு காட்டியது, பல சந்தர்ப்பங்களில் பூமியில் நடமாடிய இனம் தெரியாத விண்கலங்களும், கண்டெடுக்கப்பட்ட அவற்றின் சிறு பாகங்களும். வேற்றுக் கிரகத்திலிருப்பவர்கள் பூமிக்கு வந்து போயிருப்பதற்கு இவை சான்றுகள் என்று அவர்கள் வாதிட்டார்கள். (இந்த வேற்றுக்கிரக மனித நடமாட்டங்கள் பற்றி, சுவாரசியமான பல தகவல்கள் உள்ளன)
இதுவும் ‘நடந்திருக்கலாம்’ வகையிலான அனுமானமே தவிர, நிரூபிக்கப்படக் கூடியதல்ல என்றது விசாரணைக்குழு.
கடைசியாக ஐரோப்பிய விஞ்ஞானிகள் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் அடங்கிய ஆராய்சிக் குழு ஒன்று விசாரணைக் குழுவின் முன்னர் ஒரு சாத்தியத்தைக் கூறியது.
இன்றுவரை அந்தச் சாத்தியம் தான் விஞ்ஞானிகள் மட்டத்தில் ஓரளவு நம்பக்கூடிய சாத்தியம் என்று கூறப்படுகிறது.
பர்மியூடா முக்கோணத்தில் நடைபெறும் மாய மறைவுகளுக்கான ஊகிக்கப்பட்ட காரணங்களில், இப்போது கூறப்போகும் காரணத்தை நீங்கள் எந்த அளவுக்கு நம்புவீர்களோ தெரியாது. ஆனால், ஆச்சரியகரமாக இதுதான் விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகள் பலரால், இன்றுவரை நம்பப்படும் காரணம்.

அவர்களால் கூறும் காரணத்தின்படி, பர்மியூடா முக்கோணப் பகுதியில், கடலுக்கு மேலே ஒருவகையான மின்காந்த அலைகளினால் (electromagnetic waves) உருவாக்கப்படும் சக்தி இயங்குகிறது. இந்த காந்த சக்தி அலைகள் எப்போதும் இருப்பதில்லை.
காலநிலை சடுதியாக மாறும்போது, மின் காந்த அலைகள் வானில் ஒன்றுடன் ஒன்று மோதும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே இந்த அதீத சக்தி, கடலின் மேல் உள்ள வானில் உருவாக்கப்படுகின்றது.
இவர்கள் குறிப்பிடும் சக்தி என்ன செய்யுமென்றால், விண்வெளியில் சில சுருள்களை ஏற்படுத்தும். Space wraps அல்லது time wraps என்று இதை அழைக்கிறார்கள். இந்த சுருள்கள் அல்லது wraps ஏற்படும்போது, அது தோன்றும் பகுதியில் உள்ள அனைவரும் அதற்குள் சிக்கி கொள்கிறார்கள். அதாவது, கண்களுக்கு தென்படாத ஒரு கூண்டுக்குள் அடைபட்டுக் கொள்கிறார்கள்.
இந்தச் சுருளில் அடைபட்டுக் கொள்பவர்கள், வெளியே எங்கேயும் போய்விடுவதில்லை. நீங்களும் நாங்களும் இருக்கும் இதே பூமியின் பிரபஞ்ச எல்லைக்கு உள்ளேயே இருக்கிறார்கள். ஆனால், மற்றுமோர் பரிமாணத்தில் (another dimension) இருப்பார்கள். அல்லது மற்றுமோர் ‘காலத்தில்’ இருப்பார்கள்.
இதை இன்னுமோர் விதமாக சொன்னால், பர்மியூடா முக்கோணத்தில் இருந்து மாயமாக மறைந்து போகும் ஆட்களும், கப்பல், விமானம் போன்ற சாதனங்களும் இங்கேதான் இருக்கின்றன. ஆனால் எங்களது கண்களில் படாத பரிமாணம் ஒன்றில் இருக்கின்றன.
இவர்கள் சிக்கிக் கொண்ட பரிமாணம், கடந்த காலமாகவும் இருக்கலாம். எதிர்காலமாகவும் இருக்கலாம் என்கிறார்கள் சில விஞ்ஞானிகள். அதாவது மறைந்து போனவர்களில் சிலர் கடந்த நூற்றாண்டுக்கும் போயிருக்கலாம், இனி வரப்போகும் நூற்றாண்டுக்கும் போயிருக்கலாம்.
ஏற்கனவே கூறியிருந்தோம், இதை நம்புவது கடினம் என்று. ஆனால், இந்த தியரியில் பல ஆராய்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன. விஞ்ஞானிகள் மட்டத்தில் பலரால் இந்த தியரி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. Time warpகளை அடிப்படையாக வைத்து, பல சயின்ஸ் ஃபிக்ஷன்களும் எழுதப்பட்டிருக்கின்றன.
இந்த காரணத்தை விட்டால், பர்மியூடா முக்கோணத்தின் மர்ம மறைவுகளுக்கு வேறு எந்தவித காரணத்தையும் யாராலும் சொல்ல முடியவில்லை – இன்றுவரை.
உலகின் தீர்வு காணப்படாத மர்மங்களில் ஒன்றாகவே இதுவரை இருந்து வருகின்றது. பர்மியூடா முக்கோணத்தில் நடைபெற்ற ஒரேயொரு சம்பவத்தை மாத்திரம் கொடுத்திருக்கிறோம். ஆனால் இதுவரை நடைபெற்ற மாய மறைவுகள் நூற்றுக்கு மேற்பட்டவை. அத்தனையிலும் மறைந்தவை விமானங்கள், அல்லது கப்பல்கள்.
பர்மியூடா தீவு கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலேயே (1515ம் ஆண்டு) அதை ‘பேய் தீவு’ என்று கூறியதாகத் தெரிகின்றது. சேக்ஷ்பியரின் The Tempest நாடகத்தில்கூட பர்மியூடாவுக்கு ஒரு வகையான மர்ம வடிவமே கொடுக்கப்பட்டடிருக்கிறது.
பர்மியூடா முக்கோணத்தில் நடைபெறும் மறைவுகளையும், அங்கே பொதிந்திருக்கும் மர்மத்தையும் கண்டுபிடிக்கவென்று அனுப்பவைக்கப்பட்ட ஆராய்ச்சிக் குழுக்களும், மாயமாக மறைந்துபோன சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன. வட அமெரிக்காவுக்கு வெளியேயுள்ள நாடுகளின் கப்பல்களும், இந்த மர்ம இடத்திலிருந்து மறைந்திருக்கின்றன.
1950-ம் ஆண்டில் இருந்து, 1954-ம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் இங்கிருந்து, ஒன்பது கப்பல்கள் மாயமாக மறைந்திருக்கின்றன. ஒன்பதில் இரண்டு கப்பல்கள் ஜப்பானியக் கப்பல்கள். ஜப்பானிய அரசும் சொந்தமாக விசாரணை எல்லாம் செய்து பார்த்தது. விடை கிடைக்கவில்லை.
1955-ம் ஆண்டின் ஆரம்பத்தில் இந்தக் கடற்பகுதியை ‘அபாயப் பிரதேசம்’ என்று ஜப்பானிய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
அத்துடன் நிற்கவில்லை அவர்கள். கையோ மாறு-5 (Kaiyo Maru-5) என்ற நவீன வசதிகள் உடைய கப்பலில் விஞ்ஞானிகள் குழு ஒன்றை இந்தக் கடல் பகுதிக்கு அனுப்பியது ஜப்பானிய அரசு. மர்மங்களைக் கண்டுபிடிக்க அனுப்பப்பட்ட இந்த ஜப்பானிய விஞ்ஞானிகள் விசேட பயிற்சி பெற்றவர்கள். இந்த கப்பலில் சென்ற ஜப்பானிய விஞ்ஞானிகள் பர்மியூடா முக்கோணத்தின மர்மங்களைக் கண்டு பிடித்தார்களா?
இல்லை.
கையோ மாறு-5 கப்பலே, பர்மியூடா முக்கோணத்தின் கடற்பகுதியில் மாயமாக மறைந்து போனது. அதிலிருந்த பயிற்சி பெற்ற விஞ்ஞானிகள் ஒருவரது உடலோ, சிறிய உடைமையோ கூட கிடைக்கவில்லை. கப்பலின் ஒரு சிறு பலகைகூட தேடியும் கிடைக்கவில்லை.
இப்போது, ஜப்பானியர்களும், பிலிப்பின்ஸ்காரர்களும் இந்தக் கடல் பகுதியை பிசாசுக் கடல் என்கிறார்கள்.
மர்மம் தொடர்கிறது… இன்றுவரை!

நன்றி விறுவிறுப்பு 

Monday, June 18, 2012

PAZHAMOZHIGAL


இடிவிழுந்தபின் பஞ்சாங்கம் பார்த்துப் பயனென்ன ?
தைமாத மழை தவிட்டிற்குக் கூட காணாது
கோணல் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி
கூறு கெட்ட மாடு ஏழு கட்டுப் புல் திங்குதாம்
அஷ்டமத்துச் சனி அழுதாலும் விடாது
அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது
அறுப்புக்காலத்தில் எலிக்கு ஏழு கூத்தியாள்
ஆடிக்காற்றில் அம்மியும் குழவியும் ஆலாய்ப் பறக்கும் போது
இலவப்பஞ்சு ஏன் என்று சேதி கேட்டதாம்
ஆண் தாட்சண்யப்பட்டால் கடன் , பெண் தாட்சண்யப்பட்டால் விபச்சாரம்
அதிர்ந்து வராத புருஷனும் , மிதந்து வராத அரிசியும் பிரயோசனமில்லாதவை
அதிகாரி குசுவிட்டால் அமிர்த வஸ்து
தலையாரி குசுவிட்டால் தலையை வெட்டு
அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்தி தான்
அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்
படப்போட திங்குற மாட்டுக்குப் புடுங்கிப் போட்டா காணுமா ?
அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் வாய்க்கு முன் ஏய்க்கும்
ஆக்கங்கெட்ட அக்கா மஞ்சள் அரைத்தாலும் கரிகரியாக வரும்
ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு அதிலும் கெட்டது குருக்களுக்கு
அஞ்சும் சரியாக இருந்தால் அறியாப் பெண்ணும் கறி சமைப்பாள்
அவிசாரி ஆனாலும் முகராசி வேணும் , அங்காடி போனாலும் கைராசி வேணும்
புத்திமதி விளக்கெண்ணெய் போன்றது அதைக் கொடுப்பது சுலபம்
அதைக் குடிப்பது மிகவும் கஷ்டம்
பத்துவயதில் பெண் தேவகன்னியாக இருப்பால்
பதினைந்தில் கள்ளமற்ற முனிவரைப் போல இருப்பாள்
நாற்பதில் சைத்தானாவாள், எண்பதில் சூனியக்காரியாவாள்
பெண்களுக்கு இரண்டுமுறை பைத்தியம் பிடிக்கும்
அவள் காதல் கொண்ட சமயம்,தலை நரைக்கத் தொடங்கும் சமயம்
ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள்
பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்
நாக்கு தான் பெண்ணிற்கு வாள்,அது ஒருபோதும் துருப்பிடிப்பதில்லை
ஆண்கள் யாருமே இல்லையென்றால் பெண்கள் அனைவரும் கற்புக்கரசிகள் தான்
மணவாழ்க்கையைப் புகழ்ந்து பேசு,ஆனால் நீ எப்போதும் தனித்திரு
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்
முதல் தவறு இரண்டாவது தவறுக்கு இருக்கையைத் தயார் செய்கிறது
சோம்பேறித்தனம் தான் அடிக்கடி பொறுமை என்ற பெயரில் தவறாகக் கணிக்கப்படுகிறது
சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
எழுத்துச் சிரங்கு ஒருவனுக்குப்பிடித்துவிட்டால் அவனை ஒன்றுமே செய்யமுடியாது
அவன் பேனாவால் சொறிந்து கொண்டேயிருப்பான்
உரலில் தலையைவிட்டபிறகு உலக்கைக்கு அஞ்சக் கூடாது
சொந்த ஊரில் ஒருவன் பெயருக்கு மதிப்பு
அயலூரில் அவன் சட்டைக்குத் தான் மதிப்பு
மகிழ்ச்சியை விலைகொடுத்து வாங்க முடியுமானால் அந்த விலையைப் பற்றியும்
நாம் கண்ணீர்விட்டுக் கொண்டிருப்போம்
எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிடமுடியாது
கையைப் பிடித்து படிப்படியாக இறங்கி அழைத்துப் போய்தான் வெளியேற்றவேண்டும்
இரத்தத்தில் கையை நனைப்பவன் , கண்ணீரால் தான் அதைக் கழுவவேண்டும்
உனது ஒவ்வொரு தவறும் உன் எதிரியை உத்தமனாக்கிவிடும்
எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்
ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்
நம்பிக்கையுள்ளவர்களுக்கு கதவுகள் மூடிக்கொண்டாலும்
ஜன்னல்கள் வழிகாட்டும்
ஒரு எலும்புக்காக நேர்மையான மனிதன் தன்னை நாயாக்கிக் கொள்ளமாட்டான்
அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை , ஒருமுறையாவது தன் மேல் சவாரி செய்யும்
எஜமானனை கீழே தள்ளாமல் விடாது
அவசரமாக கல்யாணம் செய்து கொண்டால் மெதுவாக உட்கார்ந்து கொண்டுதான் அழுவாய்
காகம் உனக்கு வழிகாட்டினால் அது செத்த நாய்களிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும்
ஓநாய்கள் வாழும் இடத்தில் பறவைகள் பட்டினி கிடப்பதில்லை
செவிடன் இருமுறை சிரிப்பான்
ஒருவன் தன் கோடாரியை விழுங்கப்போவதாகச் சொன்னால் நீ அதன் காம்பைப்
பிடித்துக்கொண்டு அவனுக்கு உதவி செய்
ஒரு பெண்ணையும் காதலிக்காதவன் பன்றியிடம் பால் குடித்திருப்பான்
பொண்டாட்டியை அடிப்பவன் அவளுக்கு மூன்று நாட்கள் ஓய்வுகொடுத்துத்
தானும் மூன்று நாள் பட்டினியாயிருப்பான்
குழந்தை “ஏன்?” என்று கேட்பதுதான் தத்துவ ஞானத்தின் திறவுகோல்
அழகுக்காகத் திருமணம் செய்து கொள்பவன் இரவு நேரங்களில் இன்பமாகவும்
பகல்நேரங்களில் துக்கமாகவும் இருப்பான்
குட்டையான பெண்ணை மணந்து கொண்டால் துணி அதிகம் தேவையிராது.
அவசரக்காதல் சீக்கிரம் சூடாகி சீக்கிரம் குளிர்ந்து விடும்
ஒருத்திமீது காதல் வந்துவிட்டால் அவள் அம்மைத் தழும்புகளும்
அதிர்ஷ்டக் குறிகளாகத் தெரியும்
தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை,
காதல் வந்துவிட்டால் அழகு தேவையில்லை
கடவுள் பாவங்களை மன்னிக்கிறார்,இல்லாவிடில் சுவர்க்கம் காலியாகவே இருக்கும்
மனிதன் ஆண்டவனிடம் செல்ல நொண்டுகிறான் , சாத்தானிடம்
செல்லத் துள்ளி ஓடுகிறான்
வயிறு நிறைந்துள்ள போதும் உண்பவன் தன் பற்களாலேயே தனக்குச் சவக்குழி
தோண்டிக்கொள்கிறான்
இரவல் வாங்கிய உடை வாடை தாங்காது
உடுத்திவரும் பட்டுப்பூச்சி அரிப்பதில்லை
ஒன்பது வியாபாரம் செய்பவனுக்கு தரித்திரத்தைச் சேர்த்துப் பத்தாகும்
மஞ்சள் துண்டைக் கண்ட சுண்டெலி மளிகைக்கடை வைத்ததாம் ..
உறங்குகின்ற ஓநாயின் வாயில் ஆடுகள் சென்று விழுவதில்லை
நீ குடும்பத்தின் தலைவனாக இருக்கவேண்டுமானால் உன்னை
மூடனாகவும் செவிடனாகவும் காட்டிக் கொள்ளவேண்டும்
பிச்சைக்காரனுக்குக் கோபம் வந்தால் அவன் வயிறு தான் காயும்
மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்
மனிதரில் நாவிதனும் , பறவைகளில் காகமும் வாயாடிகள்
தற்புகழ்ச்சியின் வாடையை யாராலும் தாங்கமுடியாது
பழமொழியில் உமி கிடையாது
கெட்டிக்காரன் தன் நற்பண்புகளை உள்ளே மறைத்து வைத்துக் கொள்கிறான்
மூடன் அவைகளைத் தன் நாவிலே தொங்கவிட்டுக் கொள்கிறான்
சேற்றிலுள்ள புள்ளும் , வேட்டைநாயின் பல்லும் , மூடனுடைய சொல்லும்
அதிகமாய்க் குத்தும்
உலோபியிடம் யாசித்தல் கடலில் அகழிவெட்டுவது போன்றதாகும்
ஜாருக்கு ஜலதோஷம் வந்தால் ரஷ்யா முழுவதும் தும்மும்
ஒரு பையிலுள்ள அரிவாள் , பூட்சுக்குள் இருக்கும் துரும்பு, சாளரத்தின்
அடியிலுள்ள பெண் – இவைகள் தாம் இருப்பதை அடிக்கடி அறிவுறுத்திக்
கொண்டே இருக்கும்
மரத்திலே பானை செய்தால் ஒரு முறைதான் சமைக்க முடியும்
தாய்வார்த்தை கேளாப்பிள்ளை நாய்வாய்ச் சீலை
குழந்தையின் வயிற்றுக்குக் கண் இல்லை
ஆந்தையும் தன் மகனை ராஜாளி என்றே கொஞ்சும்
ஐந்து பெண்குழந்தைகள் உள்ள குடும்பத்திற்குத் திருடன் வேறு தேவையில்லை
மனைவியும் பாயும் வந்தபுதிதில் சிறப்பாக இருக்கும்
ஊமை மனைவி கணவனிடம் அடிபடுவதே இல்லை
திருமணம் என்ற கோணியில் தொண்ணூற்றொன்பது பாம்புகளும்
ஒரு விலாங்கும் இருக்கும்
கடவுள் ஒருவனைத் தண்டிக்க விரும்பினால் அவனுக்குத் திருமணம்
பற்றிய நினைப்பை உண்டாக்குவார்
பெண்பிள்ளை விவாகத்திற்கு முன்னாள் அழுவாள்
ஆண்பிள்ளை விவாகத்திற்கு பின்னால் அழுவான்
காபியும் காதலும் சூடாக இருக்கும் வரை தான் ருசியாக இருக்கும்
பெண்ணின் யோசனையால் பலனில்லை என்றாலும்
அதை ஏற்றுக் கொள்ளாதவன் பாடு அவலம்தான்
கூரை ஏறிக் கோழி பிடிக்கமுடியாத குருக்கள்
வானத்தைக் கீறி வைகுண்டத்தைக் காட்டுவாரா
சோத்துல கெடக்குற கல்லை எடுக்காதவன்
சேத்திலே கெடக்குற எருமையத் தூக்குவானா ?
உள்ளூரிலே ஓணான் பிடிக்காதவன்
உடையார் பா¨ளாயத்துல போயி உடும்பு பிடிப்பானா ?
உனக்கு நிறையத் தெரிந்திருந்தாலும் உன் தொப்பியிடமும் யோசனை கேள்
சுருக்கம் விழுந்த கழுத்தில் முத்துமாலை அழுது கொண்டே தொங்கும்
பழைய இஞ்சியில் காரம் அதிகம்
உலகத்திற்கே தெரியவேண்டிய விஷயத்தை உன் மனைவியிடம் மட்டும் சொல் ,அது போதும்
பொண்டாட்டி என்றால் புடவை துணிமணிகள் என்று அர்த்தம்
மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால் , கணவனுக்கு அமைதி கிடைக்கும்
சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம் அறுவடை மோசமானால் ஒரு வருடம் நஷ்டம்
விவாகம் மோசமானால் ஆயுள் முழுவது நஷ்டம்
தூக்கில் தொங்குவதும் மனைவி வாய்ப்பதும் விதியின் பயன்
போதகர்களுக்குள் சண்டை வந்துவிட்டால் சைத்தானுக்குக் கொண்டாட்டம்
தாடி பேன்களை உண்டாக்குமேயொழிய அறிவை உண்டாக்காது

Monday, November 28, 2011



KANNADASAN:

Kannadasan (24 June 1927 – 17 October 1981) was a famous Tamil poet and lyricist, who lived in Tamil Nadu, India. He is
frequently called kavi arasu Kannadasan (kavi arasu means 'king of poets' in Tamil language).He was born in small village by
name Sirukudalpatti near karaikudi. He wrote thousands of popular songs for Tamil cinema. He won the Sahitya Akademi

Translation Prize for his novel Cheraman Kadali in the year 1980.
His given name at birth was Muthiah. However, when he passed away at the age of 54, on October 16, 1981, millions of Tamils
remembered him only by the name Kannadasan. For Tamils all over the world, he epitomised their poetry style. Even those who
couldn't read the poetry of Kamban or the maxims of Valluvan, could hum the compositions of poet Kannadasan.

A number count of his publications shows a tally of 109 volumes, which include 21 novels and 10 slim volumes of essays on
Hinduism, captioned Arthamulla Indu Matham (Meaningful Hinduism). In addition, he produced about 4000 poems and approximately
5000 movie lyrics, between 1944 and 1981, all with an eighth grade education at the formal level. He was also an excellent
example of this century's Tamil goliard.

There is no doubt that he had a penetrating eye and keen observational powers. He also did not live a cocoon-type of life. He
dipped into everything that Tamil Nadu could offer - wine, women, drugs, politics, polemics, atheism and religious sanctuary.
After enjoying everything, what he did was remarkable - he composed verses about all his experiences, with reflective self-
deprecating humour, irony, and biting sarcasm. These verses touched the sympathetic chords of Tamils from all walks of life -
school boys, undergrads, housewives, farmers, manual labourers, plantation workers, middle class representatives and even upper class elites

Friday, November 18, 2011

சிறுநீர் கற்கள் (KIDNEY STONES)

நம் உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகங்கள். சித்த மருத்துவத்தில் இதனை அரச உறுப்பு என கூறுவார். உடலிலுள்ள ரத்தத்தை சுத்திகரித்து, கழிவை சிறுநீராக வெளியேற்றும் முக்கியமான பணியை செய்வது சிருநீரகங்கலாகும். அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் ஒவ்வொரு மனித உடம்பிலும் உள்ளன.

சிறுநீர் கற்கள் என்றால் என்ன?

சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள். இவை இரண்டும் தகுந்த விகிதத்தில் இருப்பதால்தான் அவை படிகங்களாகவோ, (CRYSTALS) திடப்பொருள்களாகவோ, சிறுநீர்த் தாரைகளில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் கற்களாக உருவாகின்றன.

சிறுநீர் கற்கள் ஏன் உருவாகின்றன?

இந்நோய் சுலபமாக ஏற்படுவதற்கான உடல் கூறு கொண்டவர்களுக்கு, உணவுப்பொருள் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறமுடியாது. நோயாளிகளில் நான்கில் ஒருவருக்கு பரம்பரையாக வருகிறது. சிறுநீரகத்தில், சிறுநீரிலுள்ள உப்புகள் ஒன்று திரண்டு பல்வேறு காரணங்களினால் சிறுநீர்ப்பாதையில் பல்வேறு அளவுள்ள கற்கள் உருவாகக்கூடும். முக்கியமாக கால்சியம், மக்னீசியம் ஆகியவற்றின் ஆக்சலேட், பாஸ்பேட் உப்புகளால் இவை உருவாகின்றன. யூரேட் அல்லது அபூர்வமாக சிஸ்டீன் கற்கள் தோன்றலாம். ஒருவருக்கு, ஒருமுறை சிறுநீரகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு.

சிறுநீர் கற்கள் அறிகுறிகள்

சிறுநீரகக் கல் மிகச்சிறிய துகள் அளவில் இருந்து மிகப்பெரியளவு அதாவது பிறந்த குழந்தையின் தலையளவு கூட வளரும். இவை சிறுநீர்ப் பாதையில் அடைப்பு ஏற்படுத்தாதவரை, வெளியில் அறிகுறிகள் தென்படாது. சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது தாங்கமுடியாத வலி ஏற்படும்.
சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும். கற்களின் வெளிபரப்பு முட்கள் போல் இருந்தால் நீர் பாதையின் உள்வரிப்படலமான சவ்வுப்படலத்தில் உராய்ந்து சிறுநீரில் ரத்தம் வெளிவரும். கண்ணுக்குத் தெரியும் அளவில் சிறுநீர் ரத்த சிவப்பாக இருக்கும் அல்லது சிறுநீரை பரிசோதனை செய்யும் போது ரத்தச் சிவப்பணுக்கள் மிகுதியாகக் தென்படும். வயிற்று வலியோடு இந்த அறிகுறியும் இருந்தால் சிறுநீரக கல் உருவாகி உள்ளதை அறிந்து கொள்ளலாம்.

சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்க

அதிகமான பழங்கள் , அதிகமான காய்கறிகள் அன்றாடம் உட்கொள்வது. அதிகமான பருப்பு மற்றும் விதை (Nuts & Legumes) வகைகள் உட்கொள்வது. குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்கள் உட்கொள்வது. முழுமையான தானிய வகைகள் (மேல் தோல் நீக்கப்படாத தானிய வகைகள்) சேர்த்தல். குறைந்த அளவிலான உப்பு சேர்த்தல். குறைந்த அளவிலான இனிப்பு வகைகள் உட்கொள்ளுதல். குறைந்த அளவிலான இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உட்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் சிறுநீரில் கற்கள் உருவாகாமல் தடுக்கலாம். தினமும் 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். பகலில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இரண்டு டம்ளர் வீதம் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவு படுக்க செல்லும் முன்னரும் தூக்கத்தில் எழுந்தும் அரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

குறைத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

காலிபிளவர், முட்டைக்கோஸ், தக்காளி, கத்தரிக்காய், பசலைக்கீரை, வெள்ளரி, முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, பீட்ரூட், கருணைக்கிழங்கு, சிவப்பு முள்ளங்கி, மரவள்ளிக்கிழங்கு, திராட்சை, கொய்யா, நெல்லி, பலா, நாவற்பழம், சீதாப்பழம், மாதுளை, மாம்பழம். சமையல் சோடா, சோடியம் பை&கார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் தவிர்க்க வேண்டும். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

சிறுநீர் கற்களுக்கான சிகிச்சைகள்

அளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். சிறுநீர் குழாயில் கீழ்ப்பகுதியில் காணப்படும் 4 மி.மீ. அளவை விட சிறிய கற்களில் 90 சதவீதம் தானாக வெளியேறி விடுகின்றன. அளவு 6 மி.மீ.க்கு மேல் இருந்தால் 20 சதவீதம் மட்டுமே தானாக வெளியேறும். நோயாளிகள் தாராளமாக தண்ணீர் குடிப்பதன் மூலம் சிறுநீர் வெளியேறி, அதன் மூலம் கற்களும் வெளியேறி விடும். வாழைத்தண்டு அல்லது மாற்று மருந்துகள் சிறுநீர் பெருக்கியாக செயல்படுகின்றன. வலி மிகுதியாக இருப்பின் டாக்டரின் ஆலோசனைப்படி தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். பெரிய கற்கள் சிறுநீர்ப்பாதையில் அடைப்பு ஏற்படுத்தும் போது அறுவை சிகிச்சை தேவைப்படும். தொற்று ஏற்பட்டு சிறுநீரகம் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தால் சிறுநீரக நீக்கம் தேவைப்படும். பகுதியளவு பாதிக்கப்பட்டிருந்தால் பகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
சிறுநீர்ப்பாதையில் அடைப்பு இல்லாதவர்களுக்கு லேப்ராஸ்கோபி முறையில் கற்கள் மட்டும் பொடியாக்கப்பட்டு சிறுநீரில் வெளியேற்றப்படும். இந்த கற்களை பரிசோதித்து தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

வீட்டு வைத்தியம்

வார‌த்‌தி‌ல் 3 நா‌ட்க‌ள் இடைவெ‌ளி‌யி‌ல் 2 முறை ந‌ல்லெ‌ண்ணெ‌ய், ‌விள‌க்கெ‌ண்ணெ‌ய், ‌சி‌றிது கடுகெ‌ண்ணெ‌ய் ஆ‌கியவ‌ற்றை கல‌ந்து லேசாக(வெதுவெது‌ப்பாக) சூடா‌க்‌கி,
அதனை வ‌யிறு, முதுகு, தலை ஆ‌கிய பகு‌திக‌ளி‌ல் தே‌ய்‌த்து ஊற‌வி‌ட்டு ‌பிறகு வெதுவெது‌ப்பான ‌நீ‌ரி‌ல் தலை‌க்கு கு‌ளி‌க்க வே‌ண்டு‌ம். அ‌ன்றைய ‌தின‌ம் சா‌ப்‌பிடு‌‌ம் உண‌வி‌ல், சூடான ‌மிளகு ரச‌ம், கருவே‌ப்‌பிலை‌த் துவைய‌ல், தே‌ங்கா‌ய், ‌சீரக‌ம் சே‌ர்‌த்து அரை‌த்த பூச‌ணி‌க்கா‌ய் கூ‌ட்டு, மோ‌ர், கேர‌ட் போ‌ன்றவ‌ற்றை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். எ‌ப்போது‌ம் வெதுவெது‌ப்பான ‌நீரை‌ப் பருகுத‌‌ல் ந‌ல்லது.

மேலு‌ம், ‌காலை வேளை‌யி‌ல் வெறு‌‌ம் வ‌யி‌ற்றுட‌ன் உ‌ள்ள போது ‌சி‌றிது நேர‌ம் ‌ஸ்‌கி‌ப்‌பி‌ங் என‌ப்படு‌ம் க‌யிறுதா‌ண்டு‌ம் உட‌ற்ப‌யி‌ற்‌சி செ‌ய்த‌ல் ‌மிகவு‌ம் ந‌ல்லது. இவ‌ற்றை செ‌ய்து வ‌ந்தா‌ல் ‌சிறு‌‌நீரக‌க் க‌ற்க‌ள் கரை‌ந்து போகு‌ம். ‌சிறு‌நீரக‌க் க‌ற்க‌ள் கரைய ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ண்டாலு‌ம், அதனுட‌ன் மே‌ற்கூ‌றிய பழ‌க்க வழ‌க்க‌ங்களையு‌ம் கடை‌பிடி‌ப்பது ந‌ல்லது.

தினந்தோறும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஆரம்பித்து விடுங்கள். உடலில் தண்ணீர் குறையும் போது சிறுநீரகத்தில் கற்கள் தோன்றி அவஸ்தைப்படுத்தும். அதற்கு தினமும் காலையில் வாழைத்தண்டு சாறு அருந்துவது நல்ல பலனளிக்கும்.

Friday, November 11, 2011

APPLE



நம் வீடுகளில் உபயோகிப்பதற்காக கணினியை மாற்றியமைத்தவர், எலக்ட்ரானிக் துறையை முற்றிலும் புரட்டிப் போட்டவர்… எட்டாக் கனியாக இருந்த கணினியை சாமானியர்களுக்கும் எட்டச் செய்தவர்… இன்னும் என்னென்னவோ சொல்லலாம் அவரைப் பற்றி..
ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற ஒரு சகாப்தம் நிறைவடைந்தது… அவரின் ஆன்மா சாந்தியடைய அனைவரும் வேண்டிக்கொள்வோம்…

கம்ப்யூட்டர் உலகில் பல அரிய சாதனைகளைப் படைத்த ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ‌ஜாப்ஸ் (வயது56) மரணமடைந்தார். புற்று‌நோயால்அவதிப்பட்டு வந்த அவர் நியூயார்க் நகரில் மரணமடைந்தார்.

1980ல் இவரால் உருவாக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம் இன்றைய நவீன கணினி தொழில்நுட்ப புரட்சியில் முக்கிய இடம் வகித்து வருகிறது. ஸ்டீவ் ஜாப்ஸ் இதை தனது 21வது வயதில் உருவாக்கினார். 1980ல் இவர் உருவாக்கி ஆப்பிள் கம்ப்யூட்டர் மிக வெற்றிகரமாக விளங்கியது. 2011ல் இதன் விற்பனை 4 லட்சத்தைத் தாண்டியது. இது ஒரு உலக சாதனையாகும்.

எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் கணினி தொழில் நுட்பத்தை மாற்றிய பெருமை இவருக்கே உரியது. சாதாரணமான கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமாக உருவாகிய ஆப்பிள் நிறுவனத்தில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஐ பாடு மற்றும் ஐ டியூன்ஸ், ஐபோன் உருவாக்கியவர் இவரே.

புதிய வரலாற்றைப் படைத்தது: 2007ல் ஐ‌ போனை இவர் உருவாக்கினார். ஸ்மார்ட் போன் உருவாக இது ஒரு முன்னோடியாக விளங்கியது. 2011ல் உருவாக்கப்பட்ட ஐ டியூன்ஸ் சேவை மேலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து முழு கம்ப்யூட்டர் பயன்பாட்டை ‌கையடக்க வடிவில் கொண்டு வரும் வகையில் இவர் உருவாக்கிய ஐ பேடு வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பம், கணினி யுகத்தில் புதிய வரலாற்றைப் படைத்தது. கடந்த ஆண்டு வரை பிரபலமாக இருந்த டேப்லட் பிசி என்ற கம்ப்யூட்டரை, ஐ பேடு பின்னுக்குத் தள்ளி, 2010 இறுதியில் ஒன்றரை கோடி விற்பனையானது.

இவர் கடந்த ஆகஸ்ட் வரை அதன் ‌தலைவராகவும் இருந்தார்.

அமெரி்க்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் 1955-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி பிறந்தார் ஸ்டீவன்பவுல் ஜாப்ஸ். கம்ப்யூட்டர் இன்ஜினியராக தனது பள்ளி வாழ்க்கையை துவக்கினார். 300-க்கும் மேற்பட்ட தனது எலெக்ட்ரானிக் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு அமெரிக்காவில் காப்புரிமை பெற்றுள்ளார். கடந்த 1977-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் கம்ப்யூட்டரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் ஐ-போன்களை அறிமுகப்படுத்தினார். அதே ஆண்டு ஜனவரி 27-ம் ஆண்டு முதன்முதலாக ஐ-பேடினை அறிமுகம் செய்து நவீன கணினி உலகில் புரட்சியை ஏற்படுத்தினார். கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பதவியிலிருந்து விலகினார். அவர் விலகினாலும் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பணியை உலகம் மறக்கவில்லை.

Thursday, November 10, 2011

மதம்

மதம் – அறிவற்ற மூட நம்பிக்கை – குருட்டுப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் கூட்டுப் பொருளாக இருக்கிறது.

அளவுக்கு மீறி குருட்டுப் பழக்க வழக்கங்களில் மூட நம்பிக்கைகள், மனத்தைச் செலிவிடுவது மனித சிந்தனையை – செயல்திறனை மழுங்கச் செய்கிறது.

மக்கள் கருணைமிக்க இந்த் கடவுளிடத்திலே தான் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்! தோல்விக்கு மேல் தோல்விகளும், துன்பங்களும் துயரங்களும் நேர்ந்தாலும் அவர்கள் ஆண்டவனிடத்திலே வைத்த அந்த நம்பிக்கை தளர்வதில்லை. அவை எல்லாவற்றையும் ஆண்டவனுடைய சோடனை என்று கருதி ஏற்றுக்கொள்கின்றனர்.

கடவுளின் மீதும், மதத்தின் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையை, பகுத்தறிவோடு ஆராய்ச்சி செய்து பார்த்தால் குழப்பந்தான் உண்டாகும். ஆனால் ஏதோ உள்ளணர்வு அந்த நம்பிக்கைகளை விடாப்படியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய நம்பிக்கைகளும் பிடிப்புகளும் இலையென்றால், வாழ்க்கை அர்த்தமற்றதாக – வறண்ட பாலைவனமாக ஆகிவிடும்.

“நீ எதை ஏற்க விரும்பவில்லையோ அதைப் பிறர்க்குச் செய்ய நினைக்காதே” – என்ற உபதேசத்தில் மகாபாரதக் கதையின் த்த்துவமே அடங்கி இருக்கிறது. தனி மனிதனின் மன நிறைவைப் பற்றிய இந்திய மக்களின் சிந்தனை. எவ்வளவு உயர்ந்ததாக இருந்திருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

மத்தத்தையும்,மூட நம்பிக்கைகளையும் குருட்டுப்பழக்க வக்கங்களையும், குருமார்களின் ஷாட பூதித்தனத்தையும் தைரியமாக்க் கண்டித்தவர் புத்தர். அவருடைய போதனைகள், புழக்கத்தைக் கடந்து, மலையில் இருந்த தவழ்ந்து வரும் இனிய காற்றைப் போல் வெளிவந்தன.

இந்து தேச சரித்திரத்தின் நீண்ட நெடுங்கால வரலாற்றில், சாதி மதக் கொடுமைகளை எதிர்த்து அறிஞர்கள் அடிக்கடி போராடி இருக்கின்றனர்.

வேலையற்றவர்களும் சோம்பேறிகளுந்தான் அதிர்ஷ்டத்தையும் ஆண்டவனையும் நம்பிக் கொண்டு திரிவார்கள் – மற்றவர்களைத் தூற்றுவதையும் பழிப்பதையும் தொழிலாகக்கொண்டு கிடப்பார்கள்.

நம்மை எத்தனையோ வியாதிகள் பீடித்திருக்கின்றன. நம்முடைய மனநோயை முதலில் போக்கிக் கொள்ள வேண்டும் – நம்மையே நாம் அடக்கியாளக் கற்றுக் கொள்ள வேண்டும். மூட நம்பிக்கைகளை விட்டொழிக்க வேண்டும். சத்தியத்தையே அடிப்படைத் தத்துவமாக்க் கொண்ட, இந்திய மண்ணின் லட்சியங்களுக்கு – முற்றும் புறம்பான மூட நம்பிக்கை.
courtesy: Tamildesam

Tuesday, October 4, 2011

பிரம்மோற்சவ வரலாறு



உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானுக்கு தினசரி அதிகாலை சுப்ரபாத சேவை முதல் இரவு ஏகாந்த சேவை உள்பட பல சேவைகள் நடைபெறுகின்றன. அதுமட்டுமல்லாது திருமலையில் சுவாமிக்கு நித்ய கல்யாணமும் பச்சை தோரணங்களும் கட்டப்படுகிறது.

பிரம்மோற்சவ விழா

ஸ்ரீநிவாசனுக்கு தினசரி மட்டுமல்லாது வாராவாரமும், மாதந்தோறும் பல சேவைகள் விழக்கள் நடந்ந வண்ணம் இருக்கிறது. இந்த அனைத்து விழாக்களிலும் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா மிகவும் சிறப்புடையுதாகும்.

ஏனெனில் ஏழுமலையானுக்கு பிரம்ம தேவன் முன்னின்று முதன்முதலாக உற்சவம் நடத்தியதால் இந்த விழாவிற்கு பிரம்மோற்சவ விழா என்று பெயர் வந்தது.

ஆண்டுதோறும் நவராத்திரி சமயங்களில் நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழா தெடர்ந்து 10 நாட்கள் மிகவும் வைபோகமாக நடைபெறும்.

நவராத்திரி பிரம்மோற்சவம்

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புரட்டாசி மாதத்தில் வார்சீக பிரம்மோற்சவமும், அதை தொடர்ந்து நவராத்திரி சமயங்களில் வழக்கம் போல் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவமும் நடைபெறும். நவராத்திரி பிரம்மோற்சவம் விசேஷ பிரம்மோற்சவம் ஆகும்.

கண்கொள்ளாகாட்சி

இந்த பிரம்மோற்சவ விழாக்கள் ஏழுமலையானின் வாகனமான கருடனின் முத்திரிரையுடன் கொடியேற்றத்தில் தொடங்கி மலையப்பசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி, சமேத உற்சவ மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் 4 மாட வீதிகளிலும் திருவீதி உhல வந்து தினசரி தொடர்ந்து 9 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிப்பது கண்கொள்ளாக்காட்சியாகும்.

முதலில் ஆதிசேஷனாக கருதப்படும் பெரிய சேஷ வாகனமும் பின்னர் வாகுதியாக கருதப்படும் சின்ன சேஷ வாகனமும், அதை தொடர்ந்து அன்னவாகனம், சிம்மவாகனம், முத்து பல்லக்கு ஊர்வலம், கற்பக விருட்ச வாகனம், தங்க பூபால வாகனம், மோகினி அவதாரம் கருட வாகனம், யானை வாகம், சூரியபிரபை, சந்திரபிரபை, ரத உற்சவம் குதிரை வாகனம் மற்றும் கடைசியாக ஏழுமலையானின் ஆயுதமான சக்கரத்தாழ்வாருக்கு சக்ர ஸ்நானம் நிகழ்ச்சியும் நடைபெறும்.

மணவாள பெருமாள்

பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் மனைவி ரானி சமவாயி 966-ம் ஆண்டு ஜுன் மாதம் 8-ந் தேதி வெள்ளிக்கிழமையன்று மணவாள பெருமாள் எனும் உற்சவ மூர்த்தியை ஏழுமலையான் கோவிலுக்கு சமர்ப்பித்து உள்ளார். பின்னர் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதங்களில் மணவாள பெருமான் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, அதன் பின்னர் நான்கு மாடவீதிகளிலும் திருவீதி உலா நடந்ததாக தெரிய வந்துள்ளது.

கிபி 1254-ம் ஆண்டு பல்லவ அரசனான விஜய கண்ட கோபாலதேவர் காலத்தில் பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற்று வந்ததற்கான ஆதராரங்கள் உள்ளன. அதன் பின் வீரநரசிங்க தேவுரு எனும் அரசர் பங்குனி உற்சவம் பிரம்மோற்சவம் ஆகிய உற்சவங்களை தொடர்ந்து நடத்தி வந்துள்ளார்.

தங்க முலாம்

இந்த கால கட்டத்தில் தான் வீர நரசிங்க தேவுடு தன்னுடைய எடைக்கு எடையாக தங்க நாணயங்களை கொண்டு துலாபாரமிட்டு ஏழுமலையான் கோவில் விமான கோபுரத்துக்கு தங்க முலாம் பூசப்பட்டது.

கி.பி. 1328-ம் ஆண்டு திருப்பதி ஏழுமலையானுக்கு ஆடி திருநாள் உற்சவங்களை திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ திருவேங்கட நாத யாதவராயுலு அரசர் நடத்தி வந்ததார்.

இதை தொடர்ந்து ஸ்ரீவீரபிரதாப தேவராய மஹா ராயுலு என்பவர் கி.பி.1429-ம் ஆண்டு ஐப்பசி மாதங்களில் பிரம்மோற்சவ விழாவை நடத்தி வந்துள்ளார்.

புஷ்பயாகம்

கி.பி. 1446-ம் ஆண்டு ஸ்ரீஹரிராயுறு மூலம் மாசி திருநாள் விழாக்கள் திருமலையில் நடைபெற்று வந்ததும் அப்போது பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாளான 11-ம் நாள் புஷ்ப யாகம் எனும் உற்சவம் நடைபெற்று வந்து உள்ளது.

இந்த உற்சவத்தில் எட்டு திக்பாலகர்களுக்கும் திருமாலிடம், பிரம்மோற்சவ விழா பணிகளை சிறப்பாக முடித்து கொடுத்து விடைபெறும் நாளாக கருதப்பட்டது.

கி.பி. 1476-ம் ஆண்டு ஸ்ரீ சடகோபன் நரசிங்க ராய முதலியாரால் சித்திரை மாத பிரம்மோற்சவங்கள் நடைபெற்று வந்து உள்ளது. இந்த பிரம்மோற்சவ விழா காலங்களில் முதல் ஏழு நாட்கள் சுவாமிக்கு ஊஞ்சல் சேவை உற்சவங்கள் நடைபெற்று வந்து உள்ளது.

வனபோஜம்

கி.பி. 1530-ம் ஆண்டு ஸ்ரீ வீர பிரதாப அச்சுத மகாராஜனால் கார்த்திகை மாதங்களில் நடைபெற்ற பிரம்மோற்சவ விழாக்களில் வன போஜனம் எனும் நிகழ்ச்சி முக்கிய நிகழ்ச்சியாக கருதப்பட்டு வந்துள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் விரதமிருந்து தங்களது குடும்பத்தாருடன் திருமலைக்கு வந்து தங்கி, அங்குள்ள வனங்களில் சமையல் செய்து ஒருவேளை மட்டும் சாப்பிட்டு பிரம்மோற்சவ விழாங்களை கண்டு ஆனந்தம் அடைந்தனர்.

இந்த ஆதாரங்களையெல்லாம் வைத்து பார்க்கும் போது ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மாசி, பங்குனி, சித்திரை ஆகிய தமிழ் மாதங்களில் பிரம்மோற்சவங்கள் விமரிசையாக ஏழுமலையானுக்கு கொண்டாடப்பட்டு வந்து உள்ளது தெரியவருகிறது.

ரதோற்சவம்

ஆனால் இதில் புரட்டாசி, கார்த்திகை, பங்குனி, தை ஆகிய மாதங்களில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாக்களில் மட்டும் ரதோற்சவம் நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு அரசர்கள் திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவ விழாவினை பல்வேறு மாதங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர். அரசர்கள் அரசாண்ட காலம் மாறியதால் இந்த மாதபிரம்மோற்சவங்கள் நின்று போனது.

ஆனால் முதன்முதலில் பிரம்மன் தொடங்கி வைத்த பிரம்மோற்சவ விழா மட்டும் தொடர்ந்து இன்று வரை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



*****