Tuesday, October 4, 2011

பிரம்மோற்சவ வரலாறு



உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானுக்கு தினசரி அதிகாலை சுப்ரபாத சேவை முதல் இரவு ஏகாந்த சேவை உள்பட பல சேவைகள் நடைபெறுகின்றன. அதுமட்டுமல்லாது திருமலையில் சுவாமிக்கு நித்ய கல்யாணமும் பச்சை தோரணங்களும் கட்டப்படுகிறது.

பிரம்மோற்சவ விழா

ஸ்ரீநிவாசனுக்கு தினசரி மட்டுமல்லாது வாராவாரமும், மாதந்தோறும் பல சேவைகள் விழக்கள் நடந்ந வண்ணம் இருக்கிறது. இந்த அனைத்து விழாக்களிலும் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா மிகவும் சிறப்புடையுதாகும்.

ஏனெனில் ஏழுமலையானுக்கு பிரம்ம தேவன் முன்னின்று முதன்முதலாக உற்சவம் நடத்தியதால் இந்த விழாவிற்கு பிரம்மோற்சவ விழா என்று பெயர் வந்தது.

ஆண்டுதோறும் நவராத்திரி சமயங்களில் நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழா தெடர்ந்து 10 நாட்கள் மிகவும் வைபோகமாக நடைபெறும்.

நவராத்திரி பிரம்மோற்சவம்

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புரட்டாசி மாதத்தில் வார்சீக பிரம்மோற்சவமும், அதை தொடர்ந்து நவராத்திரி சமயங்களில் வழக்கம் போல் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவமும் நடைபெறும். நவராத்திரி பிரம்மோற்சவம் விசேஷ பிரம்மோற்சவம் ஆகும்.

கண்கொள்ளாகாட்சி

இந்த பிரம்மோற்சவ விழாக்கள் ஏழுமலையானின் வாகனமான கருடனின் முத்திரிரையுடன் கொடியேற்றத்தில் தொடங்கி மலையப்பசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி, சமேத உற்சவ மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் 4 மாட வீதிகளிலும் திருவீதி உhல வந்து தினசரி தொடர்ந்து 9 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிப்பது கண்கொள்ளாக்காட்சியாகும்.

முதலில் ஆதிசேஷனாக கருதப்படும் பெரிய சேஷ வாகனமும் பின்னர் வாகுதியாக கருதப்படும் சின்ன சேஷ வாகனமும், அதை தொடர்ந்து அன்னவாகனம், சிம்மவாகனம், முத்து பல்லக்கு ஊர்வலம், கற்பக விருட்ச வாகனம், தங்க பூபால வாகனம், மோகினி அவதாரம் கருட வாகனம், யானை வாகம், சூரியபிரபை, சந்திரபிரபை, ரத உற்சவம் குதிரை வாகனம் மற்றும் கடைசியாக ஏழுமலையானின் ஆயுதமான சக்கரத்தாழ்வாருக்கு சக்ர ஸ்நானம் நிகழ்ச்சியும் நடைபெறும்.

மணவாள பெருமாள்

பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் மனைவி ரானி சமவாயி 966-ம் ஆண்டு ஜுன் மாதம் 8-ந் தேதி வெள்ளிக்கிழமையன்று மணவாள பெருமாள் எனும் உற்சவ மூர்த்தியை ஏழுமலையான் கோவிலுக்கு சமர்ப்பித்து உள்ளார். பின்னர் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதங்களில் மணவாள பெருமான் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, அதன் பின்னர் நான்கு மாடவீதிகளிலும் திருவீதி உலா நடந்ததாக தெரிய வந்துள்ளது.

கிபி 1254-ம் ஆண்டு பல்லவ அரசனான விஜய கண்ட கோபாலதேவர் காலத்தில் பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற்று வந்ததற்கான ஆதராரங்கள் உள்ளன. அதன் பின் வீரநரசிங்க தேவுரு எனும் அரசர் பங்குனி உற்சவம் பிரம்மோற்சவம் ஆகிய உற்சவங்களை தொடர்ந்து நடத்தி வந்துள்ளார்.

தங்க முலாம்

இந்த கால கட்டத்தில் தான் வீர நரசிங்க தேவுடு தன்னுடைய எடைக்கு எடையாக தங்க நாணயங்களை கொண்டு துலாபாரமிட்டு ஏழுமலையான் கோவில் விமான கோபுரத்துக்கு தங்க முலாம் பூசப்பட்டது.

கி.பி. 1328-ம் ஆண்டு திருப்பதி ஏழுமலையானுக்கு ஆடி திருநாள் உற்சவங்களை திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ திருவேங்கட நாத யாதவராயுலு அரசர் நடத்தி வந்ததார்.

இதை தொடர்ந்து ஸ்ரீவீரபிரதாப தேவராய மஹா ராயுலு என்பவர் கி.பி.1429-ம் ஆண்டு ஐப்பசி மாதங்களில் பிரம்மோற்சவ விழாவை நடத்தி வந்துள்ளார்.

புஷ்பயாகம்

கி.பி. 1446-ம் ஆண்டு ஸ்ரீஹரிராயுறு மூலம் மாசி திருநாள் விழாக்கள் திருமலையில் நடைபெற்று வந்ததும் அப்போது பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாளான 11-ம் நாள் புஷ்ப யாகம் எனும் உற்சவம் நடைபெற்று வந்து உள்ளது.

இந்த உற்சவத்தில் எட்டு திக்பாலகர்களுக்கும் திருமாலிடம், பிரம்மோற்சவ விழா பணிகளை சிறப்பாக முடித்து கொடுத்து விடைபெறும் நாளாக கருதப்பட்டது.

கி.பி. 1476-ம் ஆண்டு ஸ்ரீ சடகோபன் நரசிங்க ராய முதலியாரால் சித்திரை மாத பிரம்மோற்சவங்கள் நடைபெற்று வந்து உள்ளது. இந்த பிரம்மோற்சவ விழா காலங்களில் முதல் ஏழு நாட்கள் சுவாமிக்கு ஊஞ்சல் சேவை உற்சவங்கள் நடைபெற்று வந்து உள்ளது.

வனபோஜம்

கி.பி. 1530-ம் ஆண்டு ஸ்ரீ வீர பிரதாப அச்சுத மகாராஜனால் கார்த்திகை மாதங்களில் நடைபெற்ற பிரம்மோற்சவ விழாக்களில் வன போஜனம் எனும் நிகழ்ச்சி முக்கிய நிகழ்ச்சியாக கருதப்பட்டு வந்துள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் விரதமிருந்து தங்களது குடும்பத்தாருடன் திருமலைக்கு வந்து தங்கி, அங்குள்ள வனங்களில் சமையல் செய்து ஒருவேளை மட்டும் சாப்பிட்டு பிரம்மோற்சவ விழாங்களை கண்டு ஆனந்தம் அடைந்தனர்.

இந்த ஆதாரங்களையெல்லாம் வைத்து பார்க்கும் போது ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மாசி, பங்குனி, சித்திரை ஆகிய தமிழ் மாதங்களில் பிரம்மோற்சவங்கள் விமரிசையாக ஏழுமலையானுக்கு கொண்டாடப்பட்டு வந்து உள்ளது தெரியவருகிறது.

ரதோற்சவம்

ஆனால் இதில் புரட்டாசி, கார்த்திகை, பங்குனி, தை ஆகிய மாதங்களில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாக்களில் மட்டும் ரதோற்சவம் நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு அரசர்கள் திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவ விழாவினை பல்வேறு மாதங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர். அரசர்கள் அரசாண்ட காலம் மாறியதால் இந்த மாதபிரம்மோற்சவங்கள் நின்று போனது.

ஆனால் முதன்முதலில் பிரம்மன் தொடங்கி வைத்த பிரம்மோற்சவ விழா மட்டும் தொடர்ந்து இன்று வரை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



*****

உறவுகள் மேம்பட ...

குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்கவும், இதோ சில எளிய வழிகள்.
****


நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
அர்த்தமில்லாமலும், தேவை இல்லாமலும், பின் விளைவு அறியாமலும், பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.
எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசூக்காக கையாளுங்கள்
விட்டுக்கொடுங்கள்
சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்
நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்.
குறுகிய மனபான்மையை விட்டொழியுங்கள்.
உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள் .
மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நிiன்த்து கர்வப்படாதீர்கள் .
அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்
கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்.
அற்ப விஷயங்களைப் பெரிதுப்படுத்தாதீர்கள்.
உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்
மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.
மற்றவர்களுக்கு உரிய மரியாதை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
புன்முறுவல் காட்டவும். சிற்சில அன்புச் கொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.
அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
பிரச்சனைகள் ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்.

****

LORD VENKATESHWARA



This is simply amazing, THE CREATOR!!!

IF WE HAVE RIGHT VISION EVEN HILLS RESEMBLE THE DEITY


Watch this familiar picture (simple guess Tirumala hill)

What if we turn it 90 degrees anti clock wise

If you still have confusion how it looks like here is the explanation
Now you can never see these hills in any other view other than this I bet