Sunday, September 18, 2011

மஹாபாரதம்

அரசாளும் குடும்பத்திற்குள் நடந்த ஒரு சண்டை.

அரசாளுபவர்கள் சண்டையிட்டால் மாளுவது சாதாரண மக்கள். போர் யாருக்கும் நல்லது அல்ல.

முடிந்தால் போரை தவிர்ப்பது தான் வீரம். வாய்மையே வெல்லும். வாய்மையை வெல்ல வைக்க சில பொய்கள் அவசியமாகிறது. ஆனால் அப்படி சொல்லப்படாத பொய்களினால் வாய்மையே தோற்கவேண்டி நிலை வந்தால் அது ஆபத்து.


பாண்டவர்கள்

தாய் சொல்லை தட்டாதவர்கள்

சகோதரத்துவத்திற்கு மதிப்பு கொடுத்தவர்கள்

சூதாட்டம் எனும் தவறு செய்ததால் நாட்டை இழந்தவர்கள். அதனால் பல கஷ்டமும் பட்டவர்கள்.

கௌரவர்கள்

சொன்ன வார்த்தையை காப்பாற்றாதவர்கள்.

தந்தை சொல்லையும் தாய் சொல்லையும் மீறியவர்கள்

சூழ்ச்சியினால் நேர்மையை வெல்ல நினைத்தவர்கள்.

பல நேர்மையற்ற காரியத்தை செய்தவர்கள்

ஒரு பெண்ணை அவமானப்படுத்தியவர்கள்.


திரெளபதி

மிகவும் காராசாரமாக இணையத்தில் விவாதிக்கப்படும் ஒரு பாத்திரம்.

அவள் விலைமாதா - இல்லை. காசுக்கு உறவு கொண்டால் தான் ஒரு பெண் விலைமாதாகிறாள்.

அவள் கள்ள உறவு கொண்டவளா - இல்லை. கணவனுக்கு அறியாமல் இன்னொரு ஆண்மகனுடன் உறவு கொண்டால் தான் அது கள்ள உறவு. இங்கு அவள் அந்த ஐவரையும் மணந்தாள். ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருடன் உறவு கொள்ளவில்லை.

ஒரு பெண் 5 பேரை மணப்பதா - ஒரு ஆண் 5 பெண்களை மணக்கும் போது ஒரு பெண்ணும் 5 பேரை மணக்கலாம். சமத்துவும் என்று பார்த்தால் அந்த காலத்திலேயே. ஒரு பெண் பல பேரை மணப்பதா - மீண்டும் நாம் கதை பல்லாயிரம் வருடங்களுக்கு முன் நடந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்த காலகட்டம் சமூக கட்டமைப்பு அப்படி மணப்பதில் ஏதாவது கட்டுபாடு இருந்து அவள் அந்த கட்டுப்பாட்டை உடைத்தாளா என்று. அப்படி இல்லை. கதைப்படி.

அர்ஜூனன்

கிருட்டிணரிடம் அறிவுரைகள் கேட்கிறார். அதுவே பிறகு பகவத் கீதையாகிறது. அதில் ஒரு மனிதனின் கடமைகளையே விளக்கியுள்ளனர் கிருட்டிணன் வாயிலாக.

பொய் புரட்டு செய்கிறான் பாண்டவர்களை ஜெயிக்க வைக்க

ஒரு வேளை நேர்மையான யுத்தம் பாண்டவர்கள் பூண்டிருந்தால் துரியோதனனின் சூழ்ச்சி வென்று மஹாபாரதத்தையே மாற்றி எழுதியிருப்பான். அதற்காக நேர்மை வெல்ல பொய்மையும் சில நேரம் ஆயுதமாக எடுக்க வேண்டும் என்று பல counter-attacks களை கிருட்டிணர் செய்வதாக கதை.

கர்ணன்

நட்பில் சிறந்தவன். தானத்தில் சிறந்தவன். தானம் கொடுப்பவர்கள் இன்றும் கூட நீ என்ன கர்ணனா என்று சொல்லும் அளவிற்கு காலங்கள் கடந்து மனதில் நின்றவன். தான் பாண்டவர்களுக்கு மூத்தவன் என்று அறிந்தும் பாண்டவர்கள் பக்கம் சேராமல் தன் நண்பனுடன் நின்றவன். இன்று யாராவது நம்மிடம் வந்து நீதான் நிஜமாகவே அம்பானியின் பிள்ளை என்று சொன்னால் நாம் ஓடிப்போய்விடுவோம். நட்புக்கு இலக்கணம் இங்கிருந்து கற்கலாம்.

துரியோதனன்

அவன் கர்ணனை பயன்படுத்தியிருந்தாலும் அவனுக்கு உரிய மரியாதை பெற்றுத் தந்தவன். தன் நண்பனுக்கு தன் மனைவிக்கும் உள்ள நட்பை சந்தேகப்படாமல் இருவர் மீதும் அளிவில்லா நம்பிக்கை கொண்டவன். நண்பனின் மனைவியை எவ்வாறு நடத்த வேண்டும் எனும் பாடம்.

பீஷ்மர்

அதர்மத்தின் பக்கம் இருந்தாலும் நாட்டை காப்பது தன் கடமை என்று துரியோதனின் பக்கமாக நின்று போர் புரிகிறார். தேசப்பற்றுக்கு உதாரணம்.

திருதிராஷ்டிரன்

கண்ணில்லாதவர். மகன் மீது அளிவிலா பாசம் கொண்டவர். தான் அடையாத ராஜ்ஜியத்தை எப்படியாவது தன் மகன் அடைய வேண்டும் என்று ஆசை கொண்டவர். நடப்பது தவறுகள் என்றிருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டே காதையும் மூடிக் கொண்டவர். இவர் ஒரு
துணைபாத்திரம் தான். ஒரு Helpless character depicted nicely. இவர் மனைவி தன் கணவன் பார்க்காத உலகை தானும் பார்க்க மாட்டேன் என்று கண்ணை மூடிக் கொண்டவள். கணவன் மேல் வைத்திருக்கும் பாசத்திற்கு ஒரு எடுத்துக் காட்டு. நல்ல பட்டிமன்ற தலைப்பு. கண்களை கட்டிக் கொள்ளாமல் தன் கணவனுக்கு சேவை செய்வது தானே நியாயம் என்பார்கள் சிலர்.

குந்தி

தவறாக குழந்தை பெற்றவள். அந்த தவறுக்காக கடைசி வரையில் வாடுகிறாள். கணவனை இழக்கிறாள். பிறகு பிள்ளைகளுடன் அவதிப்படுகிறாள்.

யுத்தம்

யுத்தம் குருக்ஷேத்திரத்தில் நடப்பதாக கதை.

மேலும் பல துணை கதைகள் நீதி நேர்மை வாய்மை இவற்றை அறிவுறுத்துவதாகவே உள்ளன.

1 comment:

  1. There is nothing is equal to our great epics RAMAYANA and Mahabharatha.
    We should be proud of it.

    ReplyDelete